Thursday, June 28, 2012

பேருந்து ஓட்டுநர்கள்....




எனக்கு முற் பிறப்பு...அடுத்த பிறப்பு ஆகியவைகளில் நம்பிக்கையில்லை..ஆயினும் அப்படி ஒன்று இருந்தால்...(எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கையில்லை..இருந்தாலும் என் ஜாதகம் அப்படி..என கலைஞர் சொல்வது போல அல்ல நான் இப்படி சொல்வது..கமல், கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும் என்பது போல)..சென்ற பிறவியில் அதிக பாவம் செய்தவர்களாய் இருந்தால்தான் இப்பிறவியில் பேருந்து ஓட்டுநர்களாக இருப்பார்கள் என்பேன்.

சென்னை போன்ற நகரில்..போக்குவரத்து நெரிசல், மெட்ரோ ரயிலுக்கான பணி என ஆங்காங்கே சுருங்கிய சாலைகள்..இதில்..கிட்டத்தட்ட 65 பயணிகள் பயணம் செய்ய வேண்டிய பேருந்தில்..100க்கும் மேல் பயணம்.. ஒரே டிரிப் என்றாலும் ஓகே..

ஆனால் காலை 5 மணி அளவில் துவங்கும் பணி..மாலை 2 மணி யளவில் முடிவு பெறுகிறது.(சில தடங்களில் முழு நாளும் வேல..அடுத்த நாள் ஓய்வு).உணவு ..கிடைக்கும் இடைவேளையில் முடித்துக் கொள்ளவேண்டும்.கொளுத்தும் வெயிலில் ..பேருந்தின் எஞ்சினிலிருந்து வெளியாகும் வெப்பம் வேறு...ஒரு டிரிப் என்றாலே தாவு தீர்ந்திடும்..ஆனால் இவர்கள் நாலு ஐந்து டிரிப்கள் அடிக்க வேண்டும்.

இடையில் பயணிகளுடன் சண்டையையும் சமாளிக்க வேண்டும்...

ஒருநாள் இப்படி பணி செய்தாலே..உலகே வெறுத்துவிடும்..

எல்லாமே ஒரு ஜான் வயிற்றுக்குத்தான்..

இதனிடையே..காலையில் வேலைக்குக் கிளம்பினால்..மாலை வீடு வந்து சேர்வது நிச்சயமில்லை..

ஓட்டுநர்கள்..அலைபேசியில் பேசியதால் தான் விபத்து என..ஒரு விபத்து எனில் உடனே சொல்லப்படும் கருத்து..ஆனால் விசாரணையில் விபத்துக்கான காரணம் வேறாய் இருக்கும்.

அண்ணா மேம்பால விபத்தும்..காரணம் இதையேத்தான் சொல்கிறது..அதே நேரத்தில்..சௌகரியமாக அமர்ந்து வண்டியை ஓட்ட வேண்டியவர் இருக்கை ..நழுவிவிடாமல் இருக்க கயிறு போட்டு கட்டப்பட்டிருந்ததை மறந்துவிடுகிறோம்.

ஊழியர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றனவா? அது முக்கியமில்லையா...

இதனால்..நான் ஓட்டுநர்களை ஆதரிப்பதாக எண்ண வேண்டாம்..

அவர்கள் பணிச்சுமையை உணர்ந்து...அவர்கள் மீதும் சிறிதேனும் பரிதாபப் படுங்கள்..

விபத்துகளுக்கான காரணத்தை..எடுத்தேன்..கவுத்தேன் பாணியில்...ஓட்டுநர்தான் விபத்துக்கான காரணம் என உடனடியாக பழியை அவர் மீது சுமத்துவதை தவிருங்கள்.

ஓட்டுநர்களும், வண்டியை எடுக்கையில்..பயணிக்கும் அனைத்து பயணிகள் உயிரும் அவர் கையில் உள்ளது என்பதை உணர வேண்டும்.

ஆமாம்..சமீபத்திய விபத்தில்..நடத்துனரை கைது செய்ய ..அவர் என்ன செய்தார்?


3 comments:

MUTHU said...

FIRST ARREST THE DEPOT MANAGER, THEN YOU DO OTHER PERSONS. BUT HERE DRIVER AND CONDUCTOR ARE ARRESTED. BECAUSE.... (ATHIKARAM)

portfolio said...

//சமீபத்திய விபத்தில்..நடத்துனரை கைது செய்ய ..அவர் என்ன செய்தார்?//

எனக்கும் அதுதான் புரியல,பாவம் அவரு...

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.