Thursday, July 28, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (29-7-11)

1)ஜெயா தொலைக்காட்சியில் பணியாற்றும் ரபி பெர்னார்ட்,இந்தி தொலைக்காட்சிகளில் நடித்துவரும் ஸ்மிருதி இரானி,தொலைக்காட்சியில் வினாடி வினா நடத்தி புகழ் பெற்ற கல்கத்தா கல்வியாளர் டெரிக் ஓ-பிரைன் ஆகியோர் ஒரே சமயத்தில் மேல்சபைக்கு தேர்வு செய்யப்பட்டு எம்.பி.ஆகியுள்ளனர்.

2)ஈமு கோழியின் இறைச்சியில் கொழுப்பு குறைவாம்.நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு மிகச்சிறந்த அசைவ உணவு இது என அமெரிக்க இதய நலச் சங்கம் சிபாரிசு செய்துள்ளது.

3)இந்தியாவில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 1000 ஆண்களுக்கு 914 ஆகும்.இந்நிலையில் பீகாரில் பகல்பூர் மாவட்டத்தில் தஹ்ரா என்னும் கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் 10 மாமரக் கன்றுகளை நடுகின்றனராம்.அவை வளர்ந்து காய்க்கும் பழங்களை விற்று அப்பெண்ணை மணமுடிக்கின்றனராம்

4)நம் நாட்டின் உயரிய விருது பாரதரத்னா...விளையாட்டுத் துறையையும் சேர்த்துக் கொண்டு சச்சினுக்கு அவ்விருதை வழங்குக் கோரிக்கை வளர்ந்து வருகிறது. பாரத் ரத்னா விருதைப் பெற்றவர் முதன் முதலில் ராஜாஜி

5)சுற்றுப்புறச் சூழலில் முதல் மாசு மிகுந்த நாடு எது என்றால்..முதலில் நாம் இந்தியா அல்லது பாகிஸ்தான் என்று சொல்வோம்.ஆனால் உண்மையில் மிகவும் அழுக்கான முதல் நாடு ஆஸ்திரேலியாவாம்.

6)சில நிறுவனங்கள் இந்தியாவிற்கு வெளியே முதலீடு செய்துள்ளன.இதில் எந்தத் தவறுமில்லை.தாராளமயத்தில் பணம் வெளியேயும் போகும் உள்ளேயும் வரும் என்றுள்ளார் நமது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி

7)சன் டிவி அலுவலகம் அமைந்துள்ள இடத்தை அரசு வழிகாட்டு மதிப்பைவிட குறைவான தொகைக்கு வாங்கியதும் முத்திரைத்தாள் கட்டணத்தில் அரசுக்கு 48 லட்சம் நஷ்டம் ஏற்படுத்தியதும் இப்போது தெரியவந்துள்ளது. அடுத்த டான்ஸி..

8) தமிழில் ஒரு நல்ல படம் வந்தது என மகிழ்ச்சியடையமுடியவில்லை.உடனே அது ஆங்கிலப்பட, கொரியப்பட தழுவல் என்று சொல்லப்பட்டுவிடுகிறது.விஜயின் மதராச பட்டிணம் வந்தபோது டைடானிக்கை நினைவுப் படுத்தியதாகக் கூறப்பட்டது.இப்போது தெய்வத் திருமகள் ஐ ஆம் சாம் ஆங்கிலப்படத் தழுவலாம்.தமிழில் அப்படியென்ன கதைகளா இல்லை . அழகர்சாமியின் குதிரை தயாரிப்பாளரைக் கேட்டுப் பாருங்கள்.

4 comments:

ஹேமா said...

அதென்ன ஐயா ஈமு கோழி ?

சாந்தி மாரியப்பன் said...

சுவையான சுண்டல்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

?/ஹேமாsaid...
அதென்ன ஐயா ஈமு கோழி ?//

Ostrich

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அமைதிச்சாரல்said...
சுவையான சுண்டல்..//

Thanks