Friday, April 8, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(8-4-11)





காரா முள்ளு,சூரா முள்ளு,எலந்த முள்ளு,இண்ட முள்ளு,கருவேல முள்ளு,வேலா முள்ளு,மதுக்கார முள்ளு,முக்குறுணி முள்ளு,கிளுவ முள்ளு,ஓடசாலி முள்ளு,நெருஞ்சி முள்ளு,கள்ளி முள்ளு என முள்ளுகளுக்கு மத்தியில் ஒத்தையடிப் பாதை போற மாதிரி பொலம்பிக்கிட்டே போறா கருவாச்சி..- கருவாச்சி காவியத்தில் வைரமுத்துவின் வைர வரிகள்



2)தமிழக தேர்தல் களத்தில் அதிமுக 43 பேர்,திமுக24 பேர்,பாஜக 19 பேர்,பாமக 14 பேர்,காங்கிரஸ் 6,தேமுதிக 6 என கிரிமினல் பின்னணிக் கொண்ட வேட்பாளர்கள் உள்ளனர்.திமுகவின் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீது ஏழு வழக்குகள் உள்ளன.இவர் அந்தியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்



3)சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் யாரையும் வசைபாடாது நாகரிகமாக பிரச்சாரம் செய்பவர் நடிகை ராதிகா மட்டுமே



4)'உடம்பு வாழையிலையைப் போன்றது.இலையில் பலவிதமாய் ருசியான உணவு பருமாறுகிறார்கள்.அவற்றை நாம் சாப்பிட்டு முடித்தப் பின் இலையை பத்திரமாக சுருட்டி வைத்துக் கொள்கிறோமா என்ன? அதன் உபயோகம் தீர்ந்து விட்டால் எச்சில் இலையைத் தூர எறிந்து விடுகிறோம் இல்லையா? அது போலத்தான் நம் உடம்பும் - ரமணமகரிஷி



5)2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை 121 கோடி.இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மொத்தம் 640 மாவட்டங்கள் 7742 நகரங்கள் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் 24 கோடி குடும்பங்களிடம் எடுக்கப்பட்ட தகவல்.இந்த கணக்கெடுப்புக்கு ஆனத் தொகை 2209 கோடிகள்



6)மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் கீழ்கண்ட அற்புதவரிகள் என்னைக் கவர்ந்தவை..

நீங்கள் எந்த ஒன்றிற்கும் ஆசைப்படுவதற்கு முன்னால்..அதற்கு உங்களை நீங்களே தயார் படுத்திக் கொள்ளுங்கள்.



7)திராவிடக் கட்சிகள்..தங்கள் கொள்கைகளைப் பேசாமல்..இலவசங்களைப் பற்றி பேசுவதும்..அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத நடிகர்களை நம்புவதும்...பயன்படுத்திக் கொள்வதும்...தமிழர்களிடம் இவர்கள் வைத்திருக்கும் (அவ) நம்பிக்கையையே உணர்த்துகிறது.தமிழகம் எங்கே போகிறது.

9 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதல் விருந்து எனக்குதாங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தல் தல..

Chitra said...

திராவிடக் கட்சிகள்..தங்கள் கொள்கைகளைப் பேசாமல்..இலவசங்களைப் பற்றி பேசுவதும்..அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத நடிகர்களை நம்புவதும்...பயன்படுத்திக் கொள்வதும்...தமிழர்களிடம் இவர்கள் வைத்திருக்கும் (அவ) நம்பிக்கையையே உணர்த்துகிறது


..... இது அவல நிலைதான்.

MANO நாஞ்சில் மனோ said...

//
3)சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் யாரையும் வசைபாடாது நாகரிகமாக பிரச்சாரம் செய்பவர் நடிகை ராதிகா மட்டுமே//

அதுக்கும் உள்குத்து ரகசியம் இருக்கு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சௌந்தர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

Unknown said...

ஏழாவது கமெண்ட் அக்மார்க்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி செந்தில்