Saturday, March 19, 2011

வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்







வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என வேண்டுகிறேன்.

1967ல் காங்கிரஸ் பதவியை பறிக்கொடுத்தது முதல் திராவிடக் கட்சிகள் தான் தமிழகத்தை ஆண்டு வருகின்றன.

காங்கிரஸில் மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் இன்று இல்லை.பழிவாங்கும் உணர்ச்சியைக் கொண்டவர்கள் பிடியில் இன்றைய காங்கிரஸ்..அன்று அந்நியனை விரட்டியடித்த காங்கிரஸ் இன்று.....???!!!!

காங்கிரஸ் சப்போர்ட் இல்லையெனில்..உங்கள் திராவிடக் கட்சிகள் வெல்ல முடியாது..என காங்கிரஸ்காரர் எனப்படுபவர் சொல்லலாம்..

அந்த வார்த்தை உண்மைதான்..ஆனால்..அதற்கும் காரணம்..திராவிடக் கட்சிகளிடையே காணப்படும் ஒற்றுமையின்மை.

காங்கிரசை பொறுத்தவரை தமிழனை ஒரு இந்தியனாக அவர்கள் எண்ணுவதில்லை..

பங்களாதேஷ் மக்களை பாகிஸ்தான் பிடியிலிருந்து விடுவித்து..தனி நாடாக்கிய காங்கிரஸ்..

கிட்டத்தட்ட அதே சூழலில்..இலங்கைத் தமிழர்களை சிங்களர்களிடமிருந்து விடுவிக்க முன்வரவில்லையே..ஏன்..

காரணம்..சிங்களத்தில் அவதிப்படுவது தமிழன்..

இஸ்லாமிய சமுதாய நண்பர்களுக்காக மற்றொரு இஸ்லாம் நாட்டுடன் போட்டியிட்ட அந்த காங்கிரஸின் மனிதாபிமானம் இன்று எங்கே?

இந்தியத் தலைவன் ஒருவன் கொல்லப்பட்டான்..உண்மைதான்..

அதற்காக பழிவாங்க..இப்படித்தான் நடந்துக் கொள்ள வேண்டுமா..

பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்..பல்லாயிரக்கணக்கானோர்..கணவன், குழந்தை,ஆடு,மாடுகள்,வீடு வாசல் எல்லாம் இழந்து தவிக்கின்றனர்..கைகால்களை இழந்து..தன் முன்னே இருண்ட எதிர்காலத்தைக் காண்போர் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கு.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல..காயத்தில் உப்பைக் கொட்டுவது போல..நடந்த காமன்வெல்த் போட்டி விழாவில் சிறப்புவிருந்தினர்..அந்த நாட்டு கொடுங்கோலன்..

ஆணவச் சிரிப்பு சிரித்திருப்பர் சம்பந்தப் பட்டவர்கள்..

ஆனால் காலம் என்றாவது சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்கும்..அப்போது தன் தவறை தாமதமாக உணர்ந்து வருந்துவார்கள் இவர்கள்..அதற்கு இவர்கள் கொடுக்கும் விலையும் அதிகமாய் இருக்கும்.

சரி அது போகட்டும்..தமிழத்தில் உள்ள தமிழனின் நிலையைப் பார்ப்போம் எனில் ..அதுவும் இதைப்போலத்தான்..

தமிழக மீனவர்கள்..தன் வயிற்று பசியைத் தீர்க்க கடல் கடந்து..மீன் பிடிக்கப் போய்..சிங்கள ராணுவத்தால் சுடப்பட்டு மரணமும்..சிறைவாசமும் அடைவது..இந்நாள்வரை தொடர்கதையாய் இருக்கிறது.

வெளிநாட்டில்..இந்தியன் டர்பன் கட்டமுடியாது எனில்..விரைந்து செயல்படும் அரசு..

அமெரிக்காவில் இந்திய மாணவர்களை கண்காணிக்க காலில் கண்காணிப்பு கருவியை பூட்டியதை கண்டு உடன் நடவடிக்கை எடுக்கும் அரசு..

ஆஸ்திரேலியாவில்..இந்தியர்கள் படும் அவதிக்கு உடன் தீர்வு காணும் அரசு..

தமிழக மீனவர்கள் விஷயத்தில் மௌனியாய் இருப்பதோடு..நிலமை கட்டுக் கடங்காமல் போகையில்..வன்மையாய் கண்டிக்கிறோம் என்றும்..இது தொடராது என உறுதிமொழியும் வாரி வழங்கி வருதுடன் உருப்படியாய் இப்பிரச்னைக்கு முடிவு எடுப்பதில்லை.காரணம்..அவதிப்படுபவன்..மீனவத் தமிழர்கள்...மீனவ இந்தியர்கள் இல்லை என்பதுதான்.

ஆகவே ..நண்பர்களே!..நமக்கு முன்னால் பீகார் வாக்காளர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்..

அவ்வழியைப் பின் பற்றுவோம்..

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளிலெல்லாம் ..எதிர்க் கட்சி வேட்பாளர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு வாக்களிப்போம்.

யார் ஜெயிக்கிரார்கள் என்பதை விட யார் தோற்கிறார்கள் என்பதே முக்கியம்.

10 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

நாம என்னதான் பொளம்பினாலும், ஓட்டு போடுறவங்க போட்டுட்டு தான் இருப்பாங்க....


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

ராஜ நடராஜன் said...

//வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல..காயத்தில் உப்பைக் கொட்டுவது போல..நடந்த காமன்வெல்த் போட்டி விழாவில் சிறப்புவிருந்தினர்..அந்த நாட்டு கொடுங்கோலன்..//

சில விசயங்களை மீண்டும் சொல்வதும் மறுபடியும் நினைவுபடுத்திக்கொள்வதும் நல்லது.

raja said...

தங்கள் கருத்துடன் முழுவதுமாக உடன்படுகிறேன்.வரும் சட்டசபைத்தேர்தலில் காங்கிரஸை ஒழித்துகட்டுவதே நமது முதன்மையான வேலையாக இருக்கவேண்டும். வலைமனை எழுத்தாளர்கள் அனைவரையும் ஒரணியில் திரண்டு போராடவைக்கவேண்டும்.

MANO நாஞ்சில் மனோ said...

//வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என வேண்டுகிறேன்.//

அப்போ நாங்க யாருக்கு ஒட்டு போடணும் சொல்லுங்கோ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மனோ..
யாருமே சிறிது யோசித்தால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
உங்களை நான் பிரித்துப் பார்க்கவில்லை.
ஆனால்...நான் சொல்ல வந்ததை சரியான கோணத்தில் புரிந்துக் கொள்ளுங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி thamizhvaasi Prakash

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ராஜ நடராஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Raja

ttpian said...

ஜோதிடத்தில் சரபேந்திர முறை சற்று வித்தியாசமானது:
ஆறாம் வீட்டில் சனியும், ஒன்பதாம் வீட்டில் மகரமும் இருந்தால் மக்கள் சிரமப்படுவார்கள்
பச்சை புடவை ஒன்பதாம் கதவு இலக்கமும்
மஞ்சள் துண்டுவின் கதவு இலக்கம் ஆறும் எனக்கு தெரியாது!
ஈரோட்டு ஜோசியர்தான் அலசி ஆராய வேண்டும்!
ஒரு பக்கம் காபரா டான்சர்!
இன்னொரு பக்கம் கதை விசனகர்த்த!
இடையில் இத்தாலிய பிசா
தமிழ்நாட்டின் நிலையை எண்ணி கண்ணிற் வடிக்கிறேன்

Unknown said...

ஐயா உங்களுக்கு என் சல்யூட்...