Sunday, March 13, 2011

கருணைக்கொலையும்..மனிதாபிமானமும்





38 ஆண்டுகளாக உணர்ச்சியற்ற நிலையில் அந்தப் பெண் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்.படுக்கையிலேயே அவள் கிடப்பதால் கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.

அவள் பெயர் அருணா..வட கர்நாடகாவில் உள்ள ஹால்திப்பூர் சொந்த ஊர்.ஏழைக் குடும்பம்..அதனால்தானோ என்னவோ..மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அவளுக்கு எண்ணம்.ஆகவே மும்பைச் சென்றாள்.நர்ஸ் பயிற்சி முடித்தார்.மும்பை பரேல் பகுதியில் உள்ள மன்னர் எட்வர்ட் நினைவு மருத்துவ மனையில் வேலைக்கு சேர்ந்தார்..

அந்த மருத்துவமனையில் தான் ஷோகன்லால் என்னும் காமுகன் வார்டு பாயாக இருந்தான்.அவன் சரிவர வேலை செய்யாததால் அருணா அவனை அவ்வப்போது கடிந்து கொள்வாள்.

இதனால் ஆத்திரமடைந்த அவன் அவளை பழிவாங்கத் துடித்தான்.மேலும் அருணா கொள்ளை அழகு.அந்த அழகு வேறு அவனை ஆட்டிப் படைத்தது.

1973ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள்..மாலை 5 மணி.அருணா அன்றைய பணி முடிந்து. அறைக்குச் சென்று நர்ஸ் உடைகளை கலைந்து தன் சாதாரண உடைகளை அணிந்துக் கொள்ளச் சென்றாள்.

ஆனால்..அந்த அறையில் ஏற்கனவே மறைந்திருந்த மிருகம் ஷோகன்லால் அவள் மீது பாய்ந்தான்.தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டான்.பின் அவளைக் கொல்லவும் முடிவெடுத்தான்.நாய்ச்சங்கலியால் அருணாவின் கழுத்தை இறுக்கினான்.அப்போதுதான் அருணா உணர்வற்றுப் போனாள்.இன்னும் மீளவில்லை.

அருணாவிற்கு அப்போது வயது 23.அதே மருத்துவமனையில் வேலைப் பார்த்து வந்த டாக்டர் சந்தீப் சர்தேசாயை அவள் காதலித்து வந்தாள்.அவர்கள் திருமணத் தேதியும் குறித்தாகி விட்டது.இந்நிலையில் தான் இந்தக் கோரச் சம்பவமும் நடந்தது.

அருணாவிற்கு மருத்துவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும்..அவரது வாழ்க்கை படுக்கையில்தான் என்றாகிவிட்டது.




இன்று வயது அவளுக்கு 63..

அவள் படும் நரக வேதனையைக் கண்டு மற்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.அவளை கருணைக் கொலை செய்யலாம் என உச்ச நீதிமன்றத்தை நாடினர்.மத்திய அரசின் கருத்தை உச்ச நீதி மன்றம் கேட்டது.மத்திய அரசோ கருணைக் கொலையை அனுமதிக்க முடியாது எனக் கூறிவிட்டது.ஆதலால் உச்ச நீதி மன்றத்தில் உறுதியான தீர்ப்பளிக்க முடியவில்லை.

இது அருணா மீது கரிசனத்தோடு இருப்பவர்களால் வரவேற்கப்பட்டது.

ஆனாலும் பாவம் ..இன்னும் இந்த பூமியில் அவள் எவ்வளவு நாள் படுக்கையில் இருந்தபடியே மூச்சுக் காற்றை விட்டுக் கொண்டிருக்க வேண்டுமோ?

11 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்

சி.பி.செந்தில்குமார் said...

காலை நேரத்தில் மனதை கனக்க வைத்து விட்டீர்கள்

ஹேமா said...

மனசுக்குக் கஸ்டமாயிருக்கு !

MANO நாஞ்சில் மனோ said...

மனசு ரணமாய் வலிக்குது மக்கா...

ஆயிஷா said...

அருணாவுக்கு பூரண சுகம் அடைய
நாம் அனைவரும் பிராத்திப்போம்.

அந்த கொடும்பாவிக்கு இறைவன்
தண்டனையை கொடுப்பானாக

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அந்த சகோதரிக்காக மனம் வருந்துகிறேன்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
சி.பி.செந்தில்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஆயிஷா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சௌந்தர்