Saturday, July 10, 2010

மதராசபட்டினம் - ஒரு பார்வை




சாதாரணமாக நான் எல்லா படங்களைப் பார்த்தாலும்..அவற்றை விமரிசித்து பதிவிடுவதில்லை.

சில..அருமையான..அற்புத..சிறந்த படைப்பாய் இருந்தால்..மனதில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன்..அதை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என விழைபவன்.

அப்படி..உங்களுடன் நான் பகிர்ந்துக் கொள்ள நினைத்து எழுதிய கடைசி விமரிசனம் 'அங்காடித் தெரு'

இப்போது..மற்றொரு சந்தர்ப்பம் வந்துள்ளது..ஆம்..நான் பார்த்த 'மதராசபட்டினம்'

ஆரம்பம் டைடானிக்..பின் சில நிகழ்ச்சிகள் லகான் ஆகியவற்றை நினைவூட்டினாலும்..படத்தில் சில குறைகள் இருந்தாலும்...மன நிறைவை ஏற்படுத்திய படம் இது.

லண்டனில் வசிக்கும் மூதாட்டி ஏமி..வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் போது..இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்தியாவில் தான் காதலித்த வாலிபன் பரிதியைத் தேடி வருகிறாள்.அவளது பார்வையில் படம் சொல்லப் படுகிறது Flash back உக்தியில்.

தமிழ்த்திரைக்கு இக்கதை புதிதல்ல என்றாலும்..கதைக் களம்...கலைஞர்கள் அனைவரின் உழைப்பு ஆகியவை இப்படத்தை வெற்றிப் படமாக ஆக்குகின்றன.தனியாக காமெடிக் கென தனி டிராக் இல்லாவிடினும்..எல்லாப் பாத்திரங்களும் ஆங்காங்கே பேசும் வசனங்கள் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.

ஆர்யாவின் நடிப்பு சூப்பர்..பாத்திரத்தில் ஒன்றி விட்டார் எனலாம்..ஆத்திரப்படுவதும்,காதலை கண்களால் சொல்வதும், சண்டைக் காட்சிகளிலும், கிளைமாக்சிலும்....நகைச்சுவை இடங்களிலும் (வாத்தியார் வீட்டுக் கதவைத் தட்டி..நன்றி என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன எனக் கேட்கும் காட்சியில் ஆகட்டும்..ஏ.பி.சி.டி., கற்றுக் கொள்ளும் போதும் பிரமாதம்) அசத்தல் நடிப்பு.

கதாநாயகி ஏமி...ராவணனையும் பொறாமைப் படவைக்கும் அழகு..படம் பார்ப்பவர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்..'மறந்து விட்டியா' என்று கேட்கும் காட்சி ஒன்றே எடுத்துக்காட்டுக்கு போதும்.

படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிப்பது ஆர்ட் டைரக்டர் செல்வகுமார்..1947 மதராசபட்டினம்..இவரது உழைப்பை பறைசாற்றுகிறது.கூவம் ஆறு,போட் சவாரி,சென்ட்ரல் ஸ்டேஷன்,கை ரிக்க்ஷா (கலைஞர் நினைவிற்கு வருகிறார்),டிராம்,வால்டேக்ஸ் சாலை,பாரிமுனை,செகண்ட் லைன் பீச்..ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம்..

ஒளிப்பதிவாளர் நிரவ்ஷாவின் திறமைக்கு கிளைமாக்ஸ் காட்சி ஒன்றே போதும்.இசை ஜி.வி.பிரகாஷ்குமார்...பாடல்கள் கேட்க வைக்கின்றன...தியேட்டரில் இருந்து எழ வைக்கவில்லை.

..எல்லாத் துறையிலும்..அனைத்து நபரும் உழைத்து வந்த படம் இது..இயக்குநர் விஜய் எவ்வளவு பாராட்டினாலும் தகும்..

படத்தில் குறை என்று சொன்னால்தானே விமரிசனம்..

இடைவேளை..கிட்டத்தட்ட 90 மணித்துளிகள் கழித்து வருவதால்...பக்கத்தில் படம் பார்ப்பவர்...இந்த படத்திற்கு இடைவேளையே கிடையாது எனக் குரல் கொடுத்தார்..உண்மை...முழுப் படம் பார்த்த ஆயாசம் இடைவேளையில் தோன்றிவிடுகிறது. அதுவே படம் மெதுவாக நகர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.

லகானில் மழையே இல்லாமல் மேகங்கள் திரண்டுவருகையில்...டான்ஸும்..பாட்டும் இருந்தது..இங்கு அப்படி ஒரு நிலையில்லாதபோது..மழையைக் கண்டு அவ்வளவு மகிழ்ச்சி..ஆட்டம்...ம் ஹூம்..ஒட்டவில்லை.

எல்லாவற்றையும் திறமையாய் கையாண்ட செல்வகுமார்..இரு விஷயங்களில் கோட்டை விட்டுள்ளார்..சென்ட்ரல் ஸ்டேசன் முகப்பு கடிகாரம்..அப்போதெல்லாம்..இன்னும் பிரம்மான்டமாய் இருந்தது.பாரிமுனையில் பேருந்தை காட்டும் இவர்..அப்போதெல்லாம் பேருந்து இஞ்சின் வெளியே (இன்றைய லாரிகள் போல் இருக்கும்)இருக்கும்..அதையும் கோட்டைவிட்டு விட்டார் எனலாம்.

இவை சிறுகுறைகளே..மற்றபடி..

படம் அருமை..அனைவரும் பார்க்க வேண்டிய படம்..

தமிழ்த் திரையுலகில் திறமை மிக்க இயக்குநர்கள் உருவாகிவருவது..பெருமகிழ்ச்சியைக் கொடுக்கிறது

15 comments:

Unknown said...

நல்ல விமர்சனம் ஐயா.. இன்றுதான் பார்க்கப் போகிறேன் ..

அத்திரி said...

நல்ல விமர்சனம் ஐயா

vasu balaji said...

எல்லாரிடமும் சிறந்த விமரிசனம் வருகிறது சார் இந்தப் படத்துக்கு. நன்றி:)

Buvan said...
This comment has been removed by the author.
Cable சங்கர் said...

நிச்சயம் மிஸ் செய்ய முடியாத படம்..

Buvan said...

இந்த படத்திற்காக பணியாற்றிய கிராபிக் டிசைனருக்கும் ஒளிபதிவாளருக்கும் தான் முதலில் பாராட்டுகளை சொல்ல வேண்டும் (படத்தின் நிறைய காட்சிகள் புளு மேட் & கிரின் மேட்டில் சூட் செய்ய பட்டுள்ளது.... அவ்வாறு படம் பிடிக்கும்பொழுது ஒளிப்பதிவாளரின் லைட்டிங் சரியில்லை என்றாலும் சரி , சி.ஜி. டிசைனரின் கட்டிங் சரியில்லை என்றாலும் சரி , காட்சிகள் மிக மோசமாக தோன்றும். )....... ஒளிப்பதிவாளர் லைட்டிங்கையும், சி.ஜி.டி கட்டிங்கையும் மிக அழகாக செய்துள்ளனர்......

radhu said...

படம் பார்த்தேன் இடைவேளைக்கு பிறகு நிறய கத்தரி தேவை.

ஈரோடு கதிர் said...

நல்ல விமர்சனம்

நன்றி

மாதேவி said...

விமர்சனம் நன்று.

படம் பார்க்கிறேன் நன்றி.

Karthick Chidambaram said...

படம் பார்க்க வேண்டும். எல்லா விமர்சனங்களும் இந்த படத்திற்கு ஆதரவாகவே உள்ளது.

ஆங்கில ஆட்சி காலத்தில் ... சென்னையில் பணியாற்றிய ஒருவரை அவரது மகன் தேடி வந்து தன தந்தை பணியாற்றிய ராயபேட்டை காவல் நிலையத்தை பார்த்தது என்று சென்னைக்கு வந்த சில வரலாற்று தொடர்பான தனி மனித கதைகள் நிறையவே உண்டு.

இவற்றை நம் இயக்குனர்கள் பின்னாளில் கண்டு எடுப்பார் என்று நம்புகிறேன்.

செந்தில்குமார் said...

ம்ம்ம் நல்ல விமர்சனம்
நான் இன்னும் பாக்கல....

பிரபாகர் said...

நல்ல விமர்சனம் அய்யா!

பார்த்துவிடலாம் ஓய்வில்...

பிரபாகர்...

Prasanna said...

//இங்கு அப்படி ஒரு நிலையில்லாதபோது..மழையைக் கண்டு அவ்வளவு மகிழ்ச்சி//


மழையிடம் அவர்கள், இப்போ கொஞ்சம் வேலை இருக்கு அதனால் வேலை முடிந்த பிறகு வருவாயா என்று பாடுவார்கள்..

வேலை எல்லாம் முடிந்து மாலையில் மழை வந்ததும் மகிழ்ச்சியில் ஆடுவார்கள்.. இது லகான் இல்லை என்று சொல்லுவதற்க்காக இயக்குனர் இப்பாடலை வைத்து இருப்பாரோ என்று சந்தேகம்..

CS. Mohan Kumar said...

//கதாநாயகி ஏமி...ராவணனையும் பொறாமைப் படவைக்கும் அழகு//

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மோகன் குமார் said...
//கதாநாயகி ஏமி...ராவணனையும் பொறாமைப் படவைக்கும் அழகு//

:))//

:)))