Saturday, May 1, 2010

சங்கப் பலகை (கவிதை)

கவலைகள்

சிக்கல்கள்

வேதனைகள்

நல்லவனாய் வாழ

நாணத்தான் வேண்டியுள்ளது


பொய்யர்கள்

புரட்டர்கள்

வாய்ச்சொல் வீரர்கள்

திருடர்கள்

நாளும் கொழிக்கின்றனர்


நல்லவன் தேய்வதும்

மற்றவன் வளர்தலும் தான்

நானில நீதியா


தீர்மானித்தேன் நானும்

உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசி

உலகை வளைக்க


தக்கார்

தகவிலர் அறிந்த

சமுதாய சங்கப்பலகை

வெளியே தள்ளியது

என்னை


(டிஸ்கி...ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை இருநூறை தொட்டுவிட்டது..அனைவருக்கும் நன்றி)

7 comments:

ராமலக்ஷ்மி said...

முடித்த விதம் அருமை. ரசித்தேன்.

200-க்கு வாழ்த்துக்கள்! ஹி.. எனக்கும் கடந்த வாரம் தொட்டு விட்டது!

Paleo God said...

இரட்டை சதத்திற்கு வாழ்த்துகள்!

சங்கப் பலகை அருமை.

:)

சிநேகிதன் அக்பர் said...

சங்கப் பலகையில் வார்த்தைகள் அழகாக பதிந்துள்ளன.

200 க்கு வாழ்த்துகள் சார்.

vasu balaji said...

சங்கப் பலகைக்கு கூட பதிவர்னா ஒவ்வாமையா சார்:)). 200க்கு வாழ்த்துகள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

பலகை பறைசாற்றுகிறது உன்னத கவிதையினை..

200..... இன்னும் பெருக வாழ்த்துகள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி