Wednesday, December 9, 2009

அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்


டிசம்பர் 30 முதல் ஜனவரி 10ஆம் நாள்வரை நடைபெற உள்ள 33ஆவது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் வர உள்ளன.விவரம் வருமாறு..

நாள் - டிசம்பர் 11 மாலை 5.30 அளவில்

இடம் - டிஸ்கவரி புக் பேலஸ்
6,மகாவீர் வணிக வளாகம்
முனுசாமி சாலை
கே.கே.நகர் (மேற்கு)
(பாண்டிச்சேரி ஹவுஸ் எதிரில்)
சென்னை - 60078

அனைத்து புத்தகங்களும் வெளியீட்டுவிழாவில் 10% தள்ளுபடியில் கிடைக்கும்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் மேடைநாடகங்கள் உயிரிழந்துக் கொண்டிருக்கின்றன..என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும்..விஞ்ஞான வளர்ச்சிகளை தடுக்க முடியாது.ஆனால் இன்றும் நாடகங்கள் இங்கொன்றும்..அங்கொன்றுமாய் நடந்துக் கொண்டுதான் வருகின்றன.

சி.டி., டி.வி.டி., வருகையால் திரைப்படங்கள் பாதிக்கப் படும் என்று சொல்லப்பட்டது.இந்த கூற்றிலும் உண்மை இருந்தாலும்..நல்ல திரைப்படங்களை மக்கள் திரையரங்குகளில் சென்று பார்க்கவே விரும்புகின்றனர்.அதனால்தான் சமீபத்திய சில படங்கள் போட்டி போட்டுக்கொண்டு வசூலில் சாதனைகள் செய்து வருகின்றன.

..இணையத்தில் தினசரிகளும்,பத்திரிகைகளும் படிக்கும் வாய்ப்பிருந்தாலும்..வீடு தேடி அச்சு வாசனையுடன் காலையில் வரும் தினசரிகளைப் படிப்பதையே மக்கள் விரும்புகின்றனர்.கண்களுக்கு அதிகம் சிரமத்தைக் கொடுக்காமல் அச்சிட்ட பத்திரிககளையே படிக்க விழைகின்றனர்.

இந்நிலையில் நண்பர் பொன்.வாசுதேவன் இணைய எழுத்தாளர்களின் படைப்பை அச்சில் கொண்டுவந்து..அப்புத்தகங்கள் வெளீயீட்டு விழாவை நடத்துகிறார்.அவரின் இம் முயற்சிக்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..

வாசு..உங்களுக்கு எங்கள் வாழ்த்துகளும்..பாராட்டுகளும்..

நாமும் அவரின் இம்முயற்சி வெற்றிபெற ..மேன்மேலும் சிறக்க..வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்வதுடன்..அப்புத்தகங்களையும் வாங்கி..நம் ஒத்துழைப்பை அவருக்கு தர வேண்டும்.

அன்று வெளிவர இருக்கும் புத்தகங்கள்...

கவிதைகள்

1.கருவேல நிழல் - பா.ராஜாராம்

2.கோவில் மிருகம்- என்.விநாயகமுருகன்

3.நீர்க்கோல வாழ்வை நச்சி - 'உயிரோடை' லாவண்யா

4.கூர்தலறம் - டி.கே.பி.காந்தி

சிறுகதைகள்

1.அய்யனார் கம்மா - நர்சிம்

கட்டுரைகள்

1.பார்ப்பன சிபிஎம்+அமார்க்கியம் = ஈழ விடுதலை எதிர்ப்பு அரசியல் -தொகுப்பாசிரியர் வளர்மதி

புத்தகங்களை எழுதியுள்ள அனைத்து எழுத்தாளர்களுக்கும்..உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

9 comments:

மணிஜி said...

அப்ப நாம நாளைக்கு சந்திக்கிறோம்..காலை வணக்கம்.

கோவி.கண்ணன் said...

ம் நல்லது தான்.

ஒன்றிரண்டு நூல்களையாவது அந்தப் பகுதி பதிவர்களை அழைத்து அவர்கள் மூலமாக வெளி இட்டால் பதிவர்களை ஊக்குவித்தது போல் இருக்கும்.

அடுத்த முறையாவது அகநாழிகை பதிப்பகத்தார் பதிவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நாளை உங்களுக்கு என் மாலை வணக்கத்தை நேரிலேயே தெரிவிக்கிறேன் Maniji

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் .கருத்துக்கும் நன்றி கோவி

பூங்குன்றன்.வே said...

பதிவர்களை ஊக்கம் கொடுத்து புத்தகங்கள் வெளியிடும் திரு.வாசுவிற்கும்,இந்த நல்ல தகவலை பகிர்ந்த ராதாகிருஷ்ணனுக்கும் நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பூங்குன்றன்.

தருமி said...

வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தருமி

TKB காந்தி said...

வாழ்த்திற்க்கு நன்றி ராதா கிருஷ்ணன் :)