Monday, December 28, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1)தலைவர் என்னை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்றார்
ஏன்
அப்போதான் என் தொகுதியிலே..இடைத்தேர்தல் வருமாம்..தலைவர் பலத்தைக் காட்டமுடியுமாம்

2)ஆனாலும் அந்த நீதிபதிக்கு பக்தி அதிகம்..குற்றவாளிக் கூண்டில் நிற்கிற அர்ச்சகர் கிட்ட தன்னோட பெயர்,கோத்ரம் எல்லாம் சொல்லி வழக்கை ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே தன் பெயருக்கு அர்ச்சனை செய்யச் சொல்றார்.

3)தமிழுக்கு துரோகம் செய்யறாங்கன்னு தலைவர் யாரைச் சொல்றார்
அசின்..திரிஷா..வைத்தான்..அவங்க ஹிந்தி படத்தில நடிக்கப் போறாங்களாம்..அதனாலத்தான்

4)அந்த அமைச்சருக்கு திடீர்னு ஏன் நெஞ்சுவலி வந்துது
அவரோட செக்யூரிட்டிக்கு வந்த போலீஸைப் பார்த்ததும்..தன்னைக் கைது பண்ண வந்திருக்காங்கன்னு தப்பா நினைச்சுட்டாங்களாம்

5)நேற்று புதுசா வந்திருக்கிற அந்த படத்தோட டிக்கெட் கிடைச்சும் நீங்க ஏன் போகலை
அதுக்குள்ள எனக்கு வேற ஒரு கஷ்டம் வந்துடுத்து

6)அந்த பல் டாக்டர்கிட்ட மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்
அவர்தான் நம்ம சொத்தைப் பத்தி விசாரிக்காம சொத்தையைப் பற்றி விசாரிக்கிறாராம்

7) தலைவருக்கு மருத்துவர்கள் என்ன திடீர்னு அட்வைஸ் பண்றாங்க..
தலைவர் மௌனமாய் அழறேன்னு அறிக்கைவிட்டதாலே..அப்படி உணர்ச்சிகளை அடக்கக்கூடாது..உடலுக்கு கெடுதல்..வாய் விட்டு அழுதுடுங்கன்னு அட்வைஸ் பண்றாங்க

17 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஆனாலும் அந்த நீதிபதிக்கு பக்தி அதிகம்..குற்றவாளிக் கூண்டில் நிற்கிற அர்ச்சகர் கிட்ட தன்னோட பெயர்,கோத்ரம் எல்லாம் சொல்லி வழக்கை ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே தன் பெயருக்கு அர்ச்சனை செய்யச் சொல்றார்.//

ஆமா..........,

vasu balaji said...

சார். என்ன இது. காலைல தலைவர இந்த டரியலுக்கு உள்ளாக்குறீங்க.=)).
அர்ச்சகருக்கே சாத்துபடியாம். இதில அர்ச்சனை வேறயா? கோர்ட் உத்தரவுன்னு தொடருவான்=))

ஆரூரன் விசுவநாதன் said...

ரசிக்கும்படியான நகைச்சுவை மொட்டுக்கள்

கடைக்குட்டி said...

எனக்கு எல்லாமே புடிக்கலைன்னா நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போயிடுவேன்..

சில விஷயங்கள் பிடித்தால் கண்டிப்பா எது எதுன்னு சொல்லிட்டு போவேன்..

1,5,6 அருமை.. எதிர்பாராமல் கஷ்டப் படாமல் சிரிப்பு வருது..கண்டிப்பா வாய் விட்டு சிரிக்கலாம்..

ரமேஷ் said...

அனைத்தும் அருமை

கடைக்குட்டி said...

5)நேற்று புதுசா வந்திருக்கிற அந்த படத்தோட டிக்கெட் கிடைச்சும் நீங்க ஏன் போகலை
அதுக்குள்ள எனக்கு வேற ஒரு கஷ்டம் வந்துடுத்து
//

அந்த படம் பாவங்க.. எல்லாரும் துவைத்து காயப் போட்டாச்சு.. :-)

முனைவர் இரா.குணசீலன் said...

நேற்று புதுசா வந்திருக்கிற அந்த படத்தோட டிக்கெட் கிடைச்சும் நீங்க ஏன் போகலை
அதுக்குள்ள எனக்கு வேற ஒரு கஷ்டம் வந்துடுத்து..

உண்மைதான் இப்போது வரும் படங்ளைப் பார்க்கும் போது நமக்கு இப்போது உள்ள துன்பங்களே போதும் என்ற உயரிய கருத்தை அறிவுறுத்துவனவாகவே உள்ளன..

வால்பையன் said...

//நேற்று புதுசா வந்திருக்கிற அந்த படத்தோட டிக்கெட் கிடைச்சும் நீங்க ஏன் போகலை
அதுக்குள்ள எனக்கு வேற ஒரு கஷ்டம் வந்துடுத்து//

வேட்டைகாரன் தாக்கம் இன்னும் தீரலையா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சுரேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நன்றி said...
ரசிக்கும்படியான நகைச்சுவை மொட்டுக்கள்//

நன்றி ஆரூரன் விசுவநாதன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கடைக்குட்டி said...
1,5,6 அருமை.. எதிர்பாராமல் கஷ்டப் படாமல் சிரிப்பு வருது..கண்டிப்பா வாய் விட்டு சிரிக்கலாம்//

நன்றி கடைக்குட்டி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ரமேஷ் said...
அனைத்தும் அருமை//

நன்றி ரமேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கடைக்குட்டி said...
அந்த படம் பாவங்க.. எல்லாரும் துவைத்து காயப் போட்டாச்சு.. :-)//

நீங்க எந்த படத்தை சொல்றீங்க

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
நேற்று புதுசா வந்திருக்கிற அந்த படத்தோட டிக்கெட் கிடைச்சும் நீங்க ஏன் போகலை
அதுக்குள்ள எனக்கு வேற ஒரு கஷ்டம் வந்துடுத்து..

உண்மைதான் இப்போது வரும் படங்ளைப் பார்க்கும் போது நமக்கு இப்போது உள்ள துன்பங்களே போதும் என்ற உயரிய கருத்தை அறிவுறுத்துவனவாகவே உள்ளன..//

வருகைக்கு நன்றிமுனைவர்.இரா.குணசீலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வால்பையன் said...
//நேற்று புதுசா வந்திருக்கிற அந்த படத்தோட டிக்கெட் கிடைச்சும் நீங்க ஏன் போகலை
அதுக்குள்ள எனக்கு வேற ஒரு கஷ்டம் வந்துடுத்து//

வேட்டைகாரன் தாக்கம் இன்னும் தீரலையா?//

:-)))

வருகைக்கு நன்றி வால்பையன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பா.ரா.