Sunday, December 27, 2009

மக்களை முட்டாளாக்கும் மெகாசீரியல்கள்...


தொலைக்காட்சி ஒரு நல்ல மீடியா..இதன் மூலம் பல நல்ல..அறிவு பூர்வமான செய்திகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும்..அதே சமயம் மக்கள் மூளையை மழுங்கடிக்கும் செயலையும் செய்ய முடியும்.

அந்த இரண்டாவது வேலையைத்தான் இன்றைய தொலைக்காட்சி சேனல்கள் செய்துக் கொண்டிருக்கின்றன.பல நிகழ்ச்சிகளை இதற்கு உதாரணமாகச் சொன்னாலும்..குறிப்பாக மெகா சீரியல்கள் இந்த வேலையைச் செய்துக் கொண்டிருக்கின்றன.

தனியார் சேனல்கள் துவங்குவதற்கு முன்னால்..தூர்தர்ஷன்..தொடர்களை வழங்கி வந்தது அவை 13 வாரங்களில் முடிந்து விடும்..சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து..கதையின் கருத்திலிருந்து நகராமலிவை இருந்தன.பின் ஜுனூன் போன்ற ஹிந்தி மெகாசீரியல்கள் தமிழ்ப் படுத்தப் பட்டு வந்தன.இங்குதான் விநாச காலம் ஆரம்பித்தது எனலாம்.

இதற்குப் பின்னர் தனியார் சேனல்கள் குவிய ஆரம்பித்தன.நிகழ்ச்சிகள் குப்பையாய் ஆனது.மக்கள் விடுமுறை தினங்களில் குடும்பத்துடன் வெளியே செல்வது குறைந்தது.தொடர்கள் பார்க்க வேண்டி இரவு சமையல் காலையிலேயே செய்து முடிக்கப் பட்டது.வீட்டிற்கு வரும் விருந்தினரை சிக்கிரம் கிளப்பும்படி ஆனது.கோவில்களில் கூட்டம் குறைந்தது...இன்று ஏதேனும் கோயிலில்..சாதாரண நாளில் கூட்டம் இருந்தால்..அங்கு டி.வி., தொடர் ஷூட்டிங் நடக்கிறது எனப் பொருள்.

சரி..இந்த சீரியல்கள் அப்படி என்னதான் சொல்கின்றன..என்றால்..உருப்படியாக எதுவும் இல்லை..திரைப்படங்களில் லாஜிக் இல்லை என்பது போல் இவையும் எந்த நோக்கும் இன்றி தறி கெட்டு ஓடுகின்றன.

உதாரணத்திற்கு..இரு உதாரணம் எடுத்துக் கொள்வோம்..சமீபத்தில் முடிந்த கோலங்கள்..இதன் சாதனை ஒன்றே ஒன்றுதான்..1533 எபிசோடுகள்..மிகப்பெரிய சீரியல் என்ற ஒன்றுதான்..கடைசி எபிசோடில்..அபி பாத்திரம் எடுத்த முடிவை..முதல் 10 எபிசோடுகளிலேயே எடுத்திருக்கலாம்.ஆதியும் தற்கொலை புரிந்துக் கொண்டிருக்க வேண்டாம்..பாஸ்கரும் இறந்திருக்க மாட்டான்.என்ன ஒன்று..தெய்வயானிக்கும்,திருச்செல்வத்திற்கும் அவ்வளவு சம்பாதித்திருக்க முடியாது. ..அந்த நடிகைக்கு இரு குழந்தைகள் பிறந்து..அவர் கருவுற்றிருந்த காலங்களில் தேவையின்றி வேறு பாத்திரங்களைப் புகுத்தி...அப்பா...போதுமடா சாமி....(தேய்வயானிக்கு ஒரு எபிசோடிற்கு 60000 சம்பளமாம்)

இதுதான் இப்படி என்றால்..இன்னுமொரு சீரியல் வருகிறது பாருங்கள்...அது மக்களை முட்டாளாக்குவது போல இதுவரை எந்த சீரியலும் ஆகியிருக்காது.இப்படிப்பட்ட கற்பனைக்கு இவர்களுக்கு கின்னஸ் புத்தகத்திலேயே இடம் தரலாம்.அந்த சீரியல் கஸ்தூரி..

இதில் கஸ்தூரி என்ற பாத்திரத்தின் முகத்தில்..வில்லன் ஆசிட் ஊற்ற..முக மாற்று சிகிச்சைக்கு சிங்கப்பூர் செல்கிறார்.முகம் முழுதும் மாற்றப்பட்டு ..சிறிதும் ஹீனமில்லாமல்..மழு மழு என திரும்ப வருகிறார்(இப்பாத்திரத்தில் வேறு நடிகை நடித்திருந்தார்) சரி..தொலைகிறது..இதை நம்புவோம் என்றால்..மாற்று நடிகை உயரம்..பருமன் எல்லாமே முதல் நடிகைக்கு மாறுபட்டது.நம் மக்கள்..அப்பவும் விடாது பார்த்தார்கள்..திரும்ப முகம் மாறி வந்த பாத்திரத்தின் மீது வில்லன் வேறொருவன் ஆசிட் ஊற்ற..இம்முறை..முக மாற்று சிகிச்சையில்..பழைய நடிகையின் முகமே மீண்டும் வந்து விட்டதாம்..முகத்தில் மச்சம்..மரு உட்பட அப்படியே முகம் திரும்பிவிட்டது.அடப்பாவிகளா..அதற்கு பதிலாக..இவருக்கு பதில் அவர் என்று போட்டிருந்தாலே எங்களுக்குப் போதுமே..ஏமாற நாங்கள் இருக்கிறோம் என்பதற்காக இப்படியா...

அய்யா..சேனல் உரிமையாளர்களே..மெகாசீரியல் தயாரிப்பாளர்களே..மக்களை கொஞ்சம் அறிவுடன் வாழ விடுங்கள்

29 comments:

vasu balaji said...

:)). லீவ் நாள்ள பண்டிகை நாள்ள சீரியல் போச்சேன்னு அழுறவங்கதான் அதிகம்.

தமிழ் உதயம் said...

ஜனங்கள் மாறுவாங்க. எப்பன்னா டிவி ஃபோர் அடிக்கும் போது. சினிமா பைத்தியங்கள், டிவி பைத்தியங்கள் ஆனது. டிவி பைத்தியங்கள் நாளை இன்னொன்றின் மீது பைத்தியமாகும். மற்றப்படி மக்கள் திருந்தப்போறதெல்லாம் கிடையாது

கண்மணி/kanmani said...

கஸ்தூரி பற்றி நீங்க சொன்னது 200% சரி.முக மாற்று அறுவை சிகிச்சை இவ்வளவு சுலபமா?இரண்டாம் முறை பழைய முகம் [ஈஸ்வரி] வந்தது முதன்முறையே ஏன் சாத்தியப்படவில்லை.
இப்படி லாஜிக் இல்லாத சீரியல்கள் பார்க்கும்போது டிவி பெட்டியை உடைக்கத் தோன்றுகிறது.

முனைவர் இரா.குணசீலன் said...

சிந்திக்கவைக்கும் இடுகை..

முனைவர் இரா.குணசீலன் said...

மெகா சீரியல்கள் மக்களை மகா மடையர்கள் ஆக்குவது உண்மை..
மெகா சீரியல்களில் தொலைந்துபோகும் விலைமதிக்கமுடியாத நேரங்களை இவர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.உ

Prathap Kumar S. said...

//ஜுனூன் போன்ற ஹிந்தி மெகாசீரியல்கள் தமிழ்ப் படுத்தப் பட்டு வந்தன.இங்குதான் விநாச காலம் ஆரம்பித்தது எனலாம்.//

சாந்தி- மெகா சீரியல(காவியத்தை) வுட்டுட்டீங்களே...சார்...

கோலங்கள், கஸ்தூரி சீரியல் பத்தி இவ்வளவு விவரம் தெரிஞசுவச்சுருக்கீங்க. தினமும் பார்த்துட்டுதான் அதைப்பத்தி இவ்வளவு நக்கல் பண்ணீறீங்களா???

T.V.ராதாகிருஷ்ணன் said...

மக்களை அவ்வளவு தூரம் அடிக்ட் ஆக்கிவைச்சிருக்காங்க...
வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//tamiluthayam said...
ஜனங்கள் மாறுவாங்க. எப்பன்னா டிவி ஃபோர் அடிக்கும் போது. சினிமா பைத்தியங்கள், டிவி பைத்தியங்கள் ஆனது. டிவி பைத்தியங்கள் நாளை இன்னொன்றின் மீது பைத்தியமாகும். மற்றப்படி மக்கள் திருந்தப்போறதெல்லாம் கிடையாது//

உருப்படியாக நேரம் செல்வதில்லை என்று வருத்தமே ஏற்படுகிறது..வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கண்மணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
மெகா சீரியல்கள் மக்களை மகா மடையர்கள் ஆக்குவது உண்மை..
மெகா சீரியல்களில் தொலைந்துபோகும் விலைமதிக்கமுடியாத நேரங்களை இவர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்//
வருகைக்கு நன்றி குணசீலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///நாஞ்சில் பிரதாப் said...
//ஜுனூன் போன்ற ஹிந்தி மெகாசீரியல்கள் தமிழ்ப் படுத்தப் பட்டு வந்தன.இங்குதான் விநாச காலம் ஆரம்பித்தது எனலாம்.//

சாந்தி- மெகா சீரியல(காவியத்தை) வுட்டுட்டீங்களே...சார்...

கோலங்கள், கஸ்தூரி சீரியல் பத்தி இவ்வளவு விவரம் தெரிஞசுவச்சுருக்கீங்க. தினமும் பார்த்துட்டுதான் அதைப்பத்தி இவ்வளவு நக்கல் பண்ணீறீங்களா???///


அதை ஏன் கேட்கறீங்க..மெகாசீரியலை எபிசோட் தவறாமல் பார்க்கணும்கிறது அவசியமில்லை.எப்போ பார்த்தாலும் கதையை புரிஞ்சுக்கலாம்.மேலும் எனக்கு இதைப் பார்ப்பதைத் தவிர வேறு வேலைகள் இருக்கிறது பிரதாப்.
கஸ்தூரியைப் பொறுத்தவரை..ஒரு நண்பர் வீட்டிற்கு நான் சென்றப்போது..இந்த சீரியல் ஓடிக்கொண்டிருந்தது.அதைப் பார்த்த நான்..இவங்க தான் ஆசிட் கொட்டி மாறிட்டாங்களே..திரும்பி நடிக்கறாங்களே..என்று கேட்ட போது நண்பர்.. கதையைக்(!!!) கூறினார்.

கோவி.கண்ணன் said...

//பின் ஜுனூன் போன்ற ஹிந்தி மெகாசீரியல்கள் தமிழ்ப் படுத்தப் பட்டு வந்தன.இங்குதான் விநாச காலம் ஆரம்பித்தது எனலாம்.
//
:)

//பழைய நடிகையின் முகமே மீண்டும் வந்து விட்டதாம்..முகத்தில் மச்சம்..மரு உட்பட அப்படியே முகம் திரும்பிவிட்டது.அடப்பாவிகளா..//

அவதாரம் !!! :)

பின்னோக்கி said...

ZEITGEIST என்ற டாக்குமெண்டரி பாருங்கள்.

எதற்காக இந்த மாதிரி மெகா சீரியல்கள்?

எதற்காக இத்தனை சேனல்கள் ?

யாரிடம் இந்த சேனல்கள் இருக்கின்றன ?

அவர்களின் நோக்கம் என்ன என்று அருமையாக விவரித்திருக்கிறார்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பின்னோக்கி said...
ZEITGEIST என்ற டாக்குமெண்டரி பாருங்கள்.

எதற்காக இந்த மாதிரி மெகா சீரியல்கள்?

எதற்காக இத்தனை சேனல்கள் ?

யாரிடம் இந்த சேனல்கள் இருக்கின்றன ?

அவர்களின் நோக்கம் என்ன என்று அருமையாக விவரித்திருக்கிறார்கள்.//

வருகைக்கு நன்றி பின்னோக்கி..
நீங்கள் சொல்லும் டாகுமெண்டரி பார்க்கிறேன்..
ஆமாம்..அது இரண்டு மணி நேரம் ஓடக்கூடியதா?

Ashok D said...

உண்மைதாங்க... இந்த கூத்துகள் எங்க போய் முடியுமோ? முக்கியமாக பெண்கள் உளவியலாக பாதிக்க படுகிறார்கள். Ladies, just away with this serials, otherwise u r in deep trouble.

பின்னோக்கி said...

ஆமாம் சார். அது 2 மணி நேர டாகுமெண்டரி இரண்டு பாகங்கள் இருக்கின்றன. எல்லாரும் கண்டிப்பாக பார்க்கவேண்டியது. என்ன, டாக்குமெண்டரி பார்த்தா மனசுல இனம் புரியாத பயம் வந்துடும். எனக்கு அதுல இருந்து மீண்டு வர 2 நாள் ஆச்சு. முதல்ல நம்ப முடியல. சும்மா கதை வுடுறாங்கன்னு நினைச்சேன். ஆனா 2வது பாகம் வந்து கொஞ்ச மாதம் கழித்து அமெரிக்கா பாங்குகள் மூடப்பட்டதும், அவங்க சொன்னது உண்மைன்னு புரிய ஆரம்பிச்சது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//D.R.Ashok said...
உண்மைதாங்க... இந்த கூத்துகள் எங்க போய் முடியுமோ? முக்கியமாக பெண்கள் உளவியலாக பாதிக்க படுகிறார்கள். Ladies, just away with this serials, otherwise u r in deep trouble.//

தங்களது முதல் வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி D R Ashok

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பின்னோக்கி said...
ஆமாம் சார். அது 2 மணி நேர டாகுமெண்டரி இரண்டு பாகங்கள் இருக்கின்றன. எல்லாரும் கண்டிப்பாக பார்க்கவேண்டியது. என்ன, டாக்குமெண்டரி பார்த்தா மனசுல இனம் புரியாத பயம் வந்துடும். எனக்கு அதுல இருந்து மீண்டு வர 2 நாள் ஆச்சு. முதல்ல நம்ப முடியல. சும்மா கதை வுடுறாங்கன்னு நினைச்சேன். ஆனா 2வது பாகம் வந்து கொஞ்ச மாதம் கழித்து அமெரிக்கா பாங்குகள் மூடப்பட்டதும், அவங்க சொன்னது உண்மைன்னு புரிய ஆரம்பிச்சது.//


பார்த்துவிடுகிறேன்.நன்றி பின்னோக்கி

நசரேயன் said...

நல்ல கேளுங்க அப்படி

இராகவன் நைஜிரியா said...

மீ த எஸ்கேப்பு...

எங்களுக்கு நீங்க சொல்ற தொ(ல்)லைக் காட்சிகள் வருவதில்லை. அதனால் இந்த கஷ்டம் எங்களுக்கில்லை.

இந்தியா வந்த போது, சில உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டுக்குப் போனபோது, இந்த கஷ்டத்தைப் பார்க்க முடிந்தது.

எங்க வீட்டு தங்கமணிக்கு சீரியல் இஷ்டமில்லை. அதனால் நான் தப்பிச்சேங்க.

Anbu said...

மெகா சீரியல்கள விடுங்க , சிரிப்பு சேனல் இத்தனை இருக்கே இதுக்கு எங்க போய் முட்டிக்கிறது. தமிழனை ஒழிக்கிறதுக்காகவே இங்கிருக்கும் கொழுத்த அரசியல்வாதிகள் திட்டம் போட்டு மக்களை சிந்திக்க விடாமல் ஒட்டு மொத்த சமுதாயத்தையே முட்டாளாக்கிறார்கள்
அன்புடன்,
அன்பு

ஹேமா said...

நல்லதொரு பதிவு.

இங்க நேரத்தோட நாங்க ஓடிகிட்டு இருக்கோம்.சிலசமயம் சாப்பிடக் குளிக்கக்கூட நேரம் கிடைக்கக் கஸ்டமாயிருக்கு.நேரம் கிடைக்கிறவங்க இருந்து அழுதிட்டுப் போகட்டுமே விடுங்க !

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
நல்ல கேளுங்க அப்படி//

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said...
மீ த எஸ்கேப்பு...

எங்களுக்கு நீங்க சொல்ற தொ(ல்)லைக் காட்சிகள் வருவதில்லை. அதனால் இந்த கஷ்டம் எங்களுக்கில்லை.//

நீங்க கொடுத்துவைத்தவர்
வருகைக்கு நன்றி ராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Anbu said...
மெகா சீரியல்கள விடுங்க , சிரிப்பு சேனல் இத்தனை இருக்கே இதுக்கு எங்க போய் முட்டிக்கிறது. தமிழனை ஒழிக்கிறதுக்காகவே இங்கிருக்கும் கொழுத்த அரசியல்வாதிகள் திட்டம் போட்டு மக்களை சிந்திக்க விடாமல் ஒட்டு மொத்த சமுதாயத்தையே முட்டாளாக்கிறார்கள்
அன்புடன்,
அன்பு//

வருகைக்கு நன்றி அன்பு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
நல்லதொரு பதிவு.

இங்க நேரத்தோட நாங்க ஓடிகிட்டு இருக்கோம்.சிலசமயம் சாப்பிடக் குளிக்கக்கூட நேரம் கிடைக்கக் கஸ்டமாயிருக்கு.நேரம் கிடைக்கிறவங்க இருந்து அழுதிட்டுப் போகட்டுமே விடுங்க !//

வருகைக்கு நன்றி ஹேமா

துளசி கோபால் said...

இங்கே சென்னைக்கு வந்தபிறகுதான் இம்புட்டு சீரியல்கள் இருப்பது தெரிஞ்சது. சீரியஸ் பிஸினெஸா இருக்கே.

செல்வாக்கு இருந்தா சீரியலிலும் சம்பாதிக்கலாம்!

நல்லவேளை, எனக்கு டிவி பார்க்கும் வழக்கம் இல்லாததால் தப்பிச்சேன்.
அப்படியும் ஒரு சிலநாட்கள் சாப்பிடும்போது டிவி போடுவதுண்டு.
அப்பத்தான் என் சமையலே மேலுன்னு இருக்கும் கோபாலுக்கு:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Madam