Sunday, December 13, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் -11 (அழுகையில் நகை)

நகையும்..அழுகையும் ஒன்றோடொன்று மாறுபட்ட சுவைகள் ஆகும்.பிற சுவைகளோடு நகைச்சுவை கலத்தல் அரிதாகும்.ஆயின் அழுகைச் சுவையோடு..நகைச்சுவையைக் கலந்து கொடுப்பது இலக்கியச்சுவை ஆகும்.இரு முரண்பட்ட சுவையை கம்பர் சித்தரிக்கிறார்.ராமன் சிரித்ததை எண்ணி, அசோகவனத்தில் சீதை அழும் காட்சி.

ராமன்..ஏன் சிரித்தான்..எங்கு சிரித்தான்..

ராமனும் , சீதையும் லட்சுமணன் தொடரக் காடு செல்கின்றனர்.வழியில் ஏழி எளியவர்க்கு வேண்டியவற்றை வாரி வழங்கிய படி செல்கிறான் ராமன்.

ராமனிடம்..வேண்டுவோர்..வேண்டியதைப் பெரும் தருணம்..திரிசடன் என்னும் முனிவன் வெளியே போயிருந்தான்.நீண்ட நேரம் கழித்து இல்லம் திரும்பிய அவனை..அவன் மனைவி..'காடு செல்லும் ராமனிடம்..எல்லோரும் எல்லாம் பெற்று செல்கின்றனர்..நீ எங்கே போனாய்..நீயும் அவனைத் தேடிப்போய் எதாவது வாங்கிக்கொண்டு வா..' என துரத்துகிறாள்.

ராமன் செல்லுமிடம் அறிந்து முனிவனும் விரைந்து ராமன் முன் நின்று..'எல்லோருக்கும் எல்லாம் தருகிறாயே..எனக்கும் ஏதேனும் ஈ.' என ஈ என இளிக்கிறான்.

ராமன் காடு செல்வது பற்றி அவனுக்குக் கவலை இல்லை..தனக்கு ஏதேனும் கிடைக்க வேண்டுமென்ற கவலை.'அங்கே அரண்மனை பசுக்கள் ஆயிரக்கணக்கில் மேய்கின்றன..அவற்றுள்..இரண்டு அல்லது மூன்று பசுக்களை எடுத்துச் செல்' என்கிறான் ராமன்.

ஆனால் பேராசை முனிவனோ..தன் கையிலுள்ள தடியைச் சுற்றி எறிந்தால் அது எங்கு சென்று விழுகின்றதோஅதுவரையில் உள்ள பசுக்களை எனக்குக் கொடு..என்கிறான்.

மண்ணாசை, பொன்னாசை ஆகியவற்றை ஒழித்ததாகக் கூறும் முனிவன் மாட்டாசை பிடித்து அலைகிறான்.ராமனும்..உன் ஆசையை நிறைவேற்றிக் கொள் என்கிறான்.

முனிவன் முற்கி..முனைந்து முழு வீச்சில் கைத்தடியை வீச..ஐநூறு பசுக்களுக்கு அப்பால் சென்று விழுந்தது தண்டம்.அப்போதும் ஆசை தீராது..எல்லாப் பசுக்களையும் கவரும் வலி தனக்கில்லையே என வெறுத்துக் கொண்டான் முனிவன்.முற்றும் துறந்தவன்.

ஆனால்...இப்போது நாட்டையும்..அரசையும்,முடியையும் துறந்து பற்றற்று நிற்கும் உண்மை முனிவனான ராமன் ,.ஐநூறு பசுக்களைப் பெற்றும் ஆசை ஒழியா போலி முனிவனின் நிலைக் கண்டு வாய் விட்டு சிரித்தான்.இந்த அரியக் காட்சியை..

பரித்த செல்வம் ஒழியப் படருநாள்
அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்தவன்
கருத்தின் ஆசைக் கரையின்மை கண்டிறை
சிரித்த செய்கை நினைந்தழும் செய்கையால்
(கம்ப ராமாயணம்..சுந்தர காண்டம்)

என்று தன் கவியில் காட்டுகிறார் கம்பர்.ராமன் சிரித்த காட்சியை எண்ணி சீதை அழுதாலும்..கம்பரின் இக்காட்சி..அழுகைக்கிடையே நமக்கு சிரிப்பைத் தருகிறது..அழுகைச் சுவையோடு.நகைச்சுவை கலந்த அழகுக் காட்சி இது.

12 comments:

vasu balaji said...

வழமைபோல் அருமை.

சிவாஜி சங்கர் said...

"கொஞ்சி விளையாடும் தமிழ் உம்மிடம்
:)))

க.பாலாசி said...

கம்பன் பாடல், விளக்கம்....

பகிர்வுக்கு நன்றிகள்...

பூங்குன்றன்.வே said...

அழகான தமிழில் மறுபடியும் ஒரு அருமையான பதிவு. மிக நன்று ஸார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
வழமைபோல் அருமை.//

நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sivaji Sankar said...
"கொஞ்சி விளையாடும் தமிழ் உம்மிடம்
:)))//

நன்றி Sivaji Sankar

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாசி said...
கம்பன் பாடல், விளக்கம்....

பகிர்வுக்கு நன்றிகள்...//

நன்றி பாலாசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பூங்குன்றன்.வே said...
அழகான தமிழில் மறுபடியும் ஒரு அருமையான பதிவு. மிக நன்று ஸார்.//

நன்றி பூங்குன்றன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//வேதியற்கு//

இவரை நீங்கள் முனிவர் என்று சொல்லுகிறீர்களே...,

T.V.ராதாகிருஷ்ணன் said...

அன்றன்று உணவை இரந்து வாழவேண்டியவன்..வேதியன் எனப்படுபவன்.பற்றற்ற வாழ்வு வாழ வேண்டியவன்

Jerry Eshananda said...

ஜெய் ஸ்ரீ ராம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜெரி ஈசானந்தா. said...
ஜெய் ஸ்ரீ ராம்.//

:-)))