Tuesday, November 24, 2009

நான் என்ன படிக்கணும்?

கண்டிப்பா கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் சேர்க்கணும்- என்றார் அப்பா.

'போடா...மடையா...இன்னிக்கு சாஃப்ட்வேர்க்கு மவுஸ் இருக்குன்னு சேர்த்துட்டா...எதிர்காலத்தில எப்படி
இருக்குமோ..யாருக்குத் தெரியும்? இப்பவே பெரிய பெரிய சாஃப்ட்வேர் கம்பேனி எல்லாம் ஆள்
குறைப்பு ன்னு நியூஸ் வருது' என்றார் தாத்தா.

'ஏங்க..வேணும்னா..B.Com.,படிச்ச்ட்டு CA பண்ணட்டுமே....நம்ம நாட்டிலே என்னிக்குமே
கறுப்பு பணத்தை ஒழிக்க முடியப் போறதில்லை..அதனாலே வருமானவரி கட்டாம எப்படி
ஏய்க்கலாம்ங்கற மனப்பான்மை நம்ம மக்கள் கிட்ட மாறப்போறதில்லை.
அப்படிப்பட்டவங்களுக்கு CA உதவி கண்டிப்பா தேவை இருக்கும் என்னிக்கும்' என்றாள்
படுக்கையில் இருந்தபடியே தங்கமணி.
'இல்ல..இல்ல..நம்ம குடும்பத்திலே டாக்டர் யாரும் இல்லை..அதனால டாக்டருக்குத்தான்
படிக்கணும்'இது அம்மா.

'அவன் என்ன நினைக்கிறானோ..அதை படிக்கட்டுமே..அவனை தொந்தரவு பண்ணாதீங்க'
என்றாள் பாட்டி.

'அடடா..நான் பிறந்து 24 மணி நேரம் கூட ஆகவில்லை..அதுக்குள்ள நான் என்ன படிக்கணும்னு
என்ன சர்ச்சை..முதல்ல என் பர்த் சர்டிஃபிகேட் வாங்கிட்டு வாங்க'என்று கூற நினைத்து..
அதை எப்படி இவர்களுக்கு சொல்வது எனத் தெரியாமல் அழ ஆரம்பித்தது..காலையில்
தான் இந்த உலகத்துக்கு வந்த பாப்பா.

16 comments:

blogpaandi said...

Good story.

பாலா said...

நைஸ்! :)

அந்த கடைசி பாரா இன்னும் சுருக்கமா இருந்திருக்கலாமோ-ன்னு தோணுச்சிங்க.

ஆனா.. யோசிக்க முடியாத முடிவு! :)

Prathap Kumar S. said...

ஹஹஹ... நானும் என்னமோ நினைச்சேன்..
இப்பல்லாம் குழந்தை உண்டாயிடுச்சு கன்பார்ம் ஆனவுடனேயே இதுமாதிரில்லாம் பேச ஆரம்பிச்சுடறாய்ங்க...

vasu balaji said...

நல்லாருக்கு.

இராகவன் நைஜிரியா said...

ஆஹா...

அண்ணே... உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கா.. வாழ்த்துகள்...

கடைக்குட்டி said...

சுருக்கமாக இருந்திருக்கலாம்.. கடைசி முடிவு..

ஆனால் முடிவு சூப்பர். யூகிக்க முடியாதது..

இன்னும் இதுபோல் நிறைய கலக்கவும்..

பித்தனின் வாக்கு said...

கடைசி வரிகளைப் படித்ததும் குபீரென்ற சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை நாம் என்ன படிக்கின்றேம் என்பது முக்கியம் இல்லை. நாம் படிக்கும் அல்லது வேலைப் பார்க்கும் துறையில் எவ்வளவு ஈடுபாட்டுடனும், முனைப்புடனும் செயல் படுகின்றேம் என்பதுதான் முக்கியம். நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

எதிர்பாரா திருப்பம். அசத்திட்டிங்க.

சிநேகிதன் அக்பர் said...

கடைசியில் நல்ல ட்விஸ்ட். சிரிப்பை வரவழைத்தது.

பின்னோக்கி said...

கதை அருமை. நல்ல டிவிஸ்ட்.

Rajesh Thulasi said...

romba arumaiyaga irundhadhu nanbarey!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
blogpaandi
ஹாலிவுட் பாலா
நாஞ்சில் பிரதாப்
வானம்பாடிகள்
இராகவன்
கடைக்குட்டி
பித்தனின் வாக்கு
ஸ்டார்ஜன்
அக்பர்
நசரேயன்
பின்னோக்கி
Rajesh Thulasi

குடுகுடுப்பை said...

சூப்பர் சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
சூப்பர் சார்//

நீண்ட நாட்கள் கழித்து நம்ம கடைக்கு வந்ததற்கு நன்றி குடுகுடுப்பை

Third eye said...

மிக அருமை நண்பரே. நான் ரசித்த சிறந்த சிறுகதை. தொடருங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Third eye