Monday, October 26, 2009

குறுந்தொகையில் ஒரு பாடல்

தமிழ் இலக்கியங்களில் தலைவிக்கு கொடுக்கப்படும் இடத்திற்கு சற்றும் குறையாத இடத்தை அவள் தோழிக்கும் கொடுப்பர்.இதில் அன்று முதல் இன்று வரை படைப்பாளிகள் யாரும் விதி விலக்கல்ல.

அம்பிகாபதி நூறு பாடல்கள் பாடுகிறானா என அமராவதி தவறாக கணக்கெடுத்ததில் அவள் தோழியின் பங்கும் உண்டு.

தலைவனைப் பிரிந்து பசலை நோயில் வாடும் தலைவி..அதனை தோழியிடம் உரைத்ததுண்டு.

அதேபோல்..தமிழ்த்திரையிலும் தோழிகள் நடமாட்டம் உண்டு.கதாநாயகியின் தோழி..ரகசியத்தை சுமந்து சென்று கதாநாயகனின் தோழனிடம் கொண்டு சேர்ப்பதும்..அவன்..நாயகனிடம் கொண்டு சேர்ப்பதும் வாடிக்கை.நாயகர்கள் சந்திக்கும் போது இடையில்..இவர்கள் ஒன்று சேர்ந்து நம்மை மகிழ்விக்க நகைச்சுவை என்ற பெயரில் காமெடி செய்வதுண்டு.

திரைக்கவிஞர்களும் தங்கள் கவிதையில் தோழிகளை அழைத்ததுண்டு..

துரியோதனன் மனைவி பானுமதி..'என் உயிர்த் தோழி..'என்று மன்னன் பற்றி பாடுவதை கர்ணனில் பார்த்ததுண்டு.

அந்த நாட்களில்..'வாராயென் தோழி' பாடல் ஒலிக்காத கல்யாணங்களே இல்லை எனலாம்.

அதேபோல்..முதல் இரவன்று..கதாநாயகியை பால் சொம்புடன்..அறைக்குள்ளே தள்ளாத தோழியர் இல்லை..'தோழியர் கதை சொல்லித் தரவில்லையா" என்றும் பாடல் உண்டு.

தூது சொல்ல ஒரு தோழியில்லை என வருத்தப்பட்ட தலைவியும்..கவியின் வரியில் உண்டு.

அப்படிப்பட்ட தோழி ஒருத்தியிடம் தலைவன் சென்று செங்காந்தள் பூக்களை கொடுத்து..தலைவி மிது தனக்கான குறையைத் தெரிவிக்க..அதை எற்க மறுத்த தோழி..அப்படிப்பட்ட மலர்கள் இங்கே குறிஞ்சி மலையில் உண்டு என்கிறாள்..தலைவன்..தலைவிக்கு இடையே உள்ள ஊடலால் ஒரு சமயம் அப்படி சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.இப்போது அந்த பாடல்

குறிஞ்சி- தோழிக்கூற்று

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

- திருப்புத்தேளார்

போர்க்களம் குருதியால் சிவக்கும்படி.. பகைவர்களைக் கொன்று ஒழித்த நேரான/வளைவுகளற்ற அம்பினையும், குருதி படிந்த சிவந்த தந்தங்களையுடைய யானையையும்..இடையில் உழலும் வாளையும் கொண்ட முருகனுடைய மலையில் செக்கச் சிவந்த காந்தள் மலர்கள் கொத்துக் கொத்தாய் பூத்து உள்ளன.

இதில் தலைவியின் நாடான குறிஞ்சியின்..வீரர்களின் வீரத்தையும்..குறிஞ்சிக் கடவுள் முருகனையும்..யானைகளையும்..மலர்களையும் சொல்வதால் செழிப்பான நாடு இது என தோழி கூறுவதாகக் கொள்ளலாம்.

8 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தோழி,

தொல்லையாய் வந்தாள்,

தொலைவாள் என்று

நினைத்தேன்,

துணைவனுக்கு


துணையாய்


துணைக்கழைத்துச்


சென்று விட்டாள்,

இன்று

நானும்

ஒரு தோழியாய்....


////////////////


அந்தக் காலத்தில் இதே மாதிரி ஒரு படைப்பினை எழுதி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்,,,

பீர் | Peer said...

அருமை சார்.

//கதாநாயகியின் தோழி..ரகசியத்தை சுமந்து சென்று கதாநாயகனின் தோழனிடம் கொண்டு சேர்ப்பதும்..//

குஷியும்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

தோழிகள்..சாதாரணமாக தோழர்களைத்தான் விரும்புவர்..Suresh

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Peer

இராகவன் நைஜிரியா said...

அருமையாச் சொல்லியிருக்கீங்க.

தோழிகளைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க... தோழர்களை விட்டு விட்டீங்களே..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said...
அருமையாச் சொல்லியிருக்கீங்க.

தோழிகளைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க... தோழர்களை விட்டு விட்டீங்களே..//

தோழர்கள் இல்லாமல் தோழிகள் ஏது?

Starjan (ஸ்டார்ஜன்) said...

உள்ளேன் ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Starjan