Sunday, October 18, 2009

கலைஞர் என்னும் கலைஞன் - 4

1960ல் வந்த படம் குறவஞ்சி..
இதில் சிவாஜி, சாவித்திரி நடித்திருந்தனர்,கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.காசிலிங்கம் இயக்கம்.டி.ஆர்.பாப்பா இசை.கலைஞர் வசனத்தில் வந்த இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியடையவில்லை.

1960ல் வந்த மற்றொரு படம் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' ஜெமினி,சரோஜாதேவி நடித்தது.ஜூபிடர் பிக்சர்ஸ் தயரித்த இப்படம் டி.பிரகாஷ்ராவ் இயக்கம்.இசை விஸ்வனாதன் ராமமூர்த்தி

1961ல் வந்த படம் தாயில்லாப்பிள்ளை.இப்படத்தின் இயக்குநர் எல்.வி.பிரசாத்..கே,வி.மகாதேவன் இசை.பாலையா,எஸ்.ராமாராவ் ..காமெடி நன்றாக இருக்கும்.பிராமணரல்லா ராமராவ்..பிராமணப்பெண்ணை மணப்பார்.ஆனால் அவர்கள் மாப்பிள்ளை பிராம்மணர் என்று வெளியே கூறுவர்.இதைவைத்தே தன் காரியங்களை ராமராவ் சாதித்துக் கொள்வார்..திரைக்கதை,வசனம் கலைஞர்.

1961ல் வந்த மற்ற படம் 'அரசிளங்குமரி'..எம்.ஜி.ஆர்.,பத்மினி நடித்தபடம்,ஜி,ராமநாதன் இசை., எம்.சோமசுந்தரம் இயக்கம்..தயாரிப்பு ஏ.எஸ்.ஏ.சாமி...கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்..இப்படத்தில் பட்டுக்கோட்டயாரின் 'சின்னப்பயலே..சின்னப்பயலே..'என்ற அருமையான பாடல் உண்டு.

1963ல் வந்த படம் இருவர் உள்ளம்..சிவாஜி,சரோஜாதேவி நடித்தது.பிரபல நாவலாசிரியை லட்சுமியின் பெண்மனம் என்ற நாவலைத் தழுவியது.திரைக்கதை வசனம் கலைஞர்.இயக்கம் எல்.வி.பிரசாத்..கே.வி.மகாதெவன் இசை.எல்லாப் பாடல்களிலும்..இனிமையும்..இளமையும் இருக்கும்..எம்.ஆர்.ராதாவின் வக்கீல் காமெடி..வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்..அருமையான படம்.

1963ல் வந்த மற்றொரு படம் காஞ்சித்தலைவன்..கே.வி.மகாதேவன் இசை.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..இந்த படம் தணிக்கையிலிருந்து பல வெட்டுகளுடன் தப்பியது.அண்ணாவையே காஞ்சித்தலைவன் என்று சொல்வதாக சொல்லப்பட்டது தணிக்கைத் தரப்பு. .எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தனர்.படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

1964ல் கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம் பூம்புகார்..எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி நடித்தது.சுதர்சனம் இசை..கலைஞர் திரைக்கதை,வசனம்..கவுந்தி அடிகளாக கே.பி.சுந்தராம்பாள் நீண்ட நாட்களுக்குப் பின் திரையில் தோன்றினார்.அவரது கணீர் குரலில்..கலைஞரின்..'வாழ்க்கை என்னும் ஓடம்' பாடல் இடம் பெற்றது.வெற்றி படம்.

1965 விஜயகுமாரி நடிக்க மேகலா பிக்சர்ஸ் படம்..பூமாலை..கலைஞர் கதை திரைக்கதை, வசனம்.

8 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

test

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//1961ல் வந்த மற்ற படம் 'அரசிளங்குமரி'..//

இயக்கம் சக்கரபாணி என்று நினைக்கிறேன்

goma said...

சினிமா செய்திக்கு ஒரு என்சைக்ளோபிடியா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ILA(@)இளா said...
வணக்கம்//

நன்றி இளா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//1961ல் வந்த மற்ற படம் 'அரசிளங்குமரி'..//

இயக்கம் சக்கரபாணி என்று நினைக்கிறேன்//

ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தின் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.,சாமி
வருகைக்கு நன்றி சுரேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
சினிமா செய்திக்கு ஒரு என்சைக்ளோபிடியா//

நன்றி goma

velji said...

details rare to find.thank you!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி velji