Friday, August 14, 2009

வாய் விட்டு சிரியுங்க..

தலைவர் இன்னிக்கு கூட்டத்தில வாரிசு அரசியலை எதிர்த்து பேசப்போகிறாராம்
யார் தலைமை..யார் முன்னிலை
அவர் மச்சான் தலைமைல..மாமா முன்னிலைல மகன் வரவேற்புரை வழங்கியதும் தலைவர் பேசுவார்

2.எங்க தலைவர் எப்பவுமே..கைகளுக்கு கிளவுஸ்தான் போட்டிட்டு இருப்பார்.
ஏன்?
கை சுத்தம்ங்கறதை சிம்பாலிக்கா சொல்றாராம்

3.தலைவர்- தொண்டர்களே! உஷாராய் இருங்கள்.எதிர்க்கட்சித் தலைவர் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்கிறார்.பழைய உலகை அவர் அபகரிக்க திட்டமிடுகிறார்.

4.திடீரென ஒரு பேரணி வருதே..எந்தக் கட்சியுடையது..
பேரணி இல்லை..கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒன்னா வராங்க

5.நம்ம தலைவரோட வேட்பு மனு ஏன் நிராகரிக்கப்பட்டது
பழக்க தோஷத்தில..வேட்பு மனுவிற்கு பதிலா முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துட்டாராம்.

6.நம்ம தலைவர் சிறுகக் கட்டி பெருக வாழ்பவர்
அப்படியா?
ஆமாம்..சின்ன வீடு ஒன்னை கட்டிக்கிட்டு பெரிய வீட்டோட வாழ்ந்து வருபவர்.

8 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஹா ஹா! சூப்பர்!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஜோதிபாரதி

மங்களூர் சிவா said...

:))))))))))))

Starjan (ஸ்டார்ஜன்) said...

சிரிப்பு வருது சிரிப்பு வருது

சிவகுமார் சுப்புராமன் said...

அரசியல் சிரிப்பா இருக்கு! அர்சியல் சிரிப்பா சிரிகிறதை சிம்பாலிக்கா சொல்லியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
:))))))))))))//


நன்றி சிவா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சிரிப்பு வருது சிரிப்பு வருது//

வாய் விட்டு சிரியுங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சிவகுமார் said...
அரசியல் சிரிப்பா இருக்கு! அர்சியல் சிரிப்பா சிரிகிறதை சிம்பாலிக்கா சொல்லியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!//


நன்றி சிவகுமார்