Tuesday, March 31, 2009

அ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை என்னால்தான் கிடைத்தது..

புரட்சித் தலைவர் மறைந்ததும்..அச்செய்தியைக் கூட ஜெ யிடம் சொல்ல நாதி இல்லாத போது..எதிர்க்கட்சித் தலைவருக்கும் தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில்..இன்றைய அந்த கட்சியின் முன்னாள் களும்..ஜெ விடம் சொல்லாத போது..என் மனைவியை அனுப்பி சொல்ல வைத்தேன்.

இதைச்சொன்னவர் யார் என இப்போது தெரிந்திருக்குமே! ஆம்..இப்படி சொன்னவர் நடராஜன் தான்...இப்போதும் தெரியவில்லையெனில் சசிகலாவின் கணவர். தெரிந்துவிட்டதா?

ஜெ..ஜா..அணிகள் இருந்தபோது..அரசியல் சதுரங்கத்தில் வேக வேகமாக காய்களை நகர்த்தி..நான் காட்டிய விவேகம், சாதுர்யம்..ஜெ வை நிமிர்த்தி மேலே கொண்டுவந்தது.ஆனால் நான் இதுவரை அதற்காக எதையும் எதிர்ப்பார்த்ததில்லை.ஜெ விற்காக உழைத்தேன்..பிரிவுபட்ட அணிகளை ஒன்று சேர்த்து...தில்லி சென்று 24 மணி நேரத்தில் இரட்டை இலை சின்னத்தை வாங்கிக் கொடுத்தேன்.இது வரலாற்று உண்மை.இதை அ.தி.மு.க., தலைமை இன்று மறந்துவிடலாம்..ஆனால் மனசாட்சியால்..மறக்கமுடியாது, மறைக்கவும் முடியாது.தமிழக அரசியல் வரலாற்றில் எனக்கு உள்ள இடத்தை எவரும் மறுக்க முடியாது.

நான் யாரிடமும் பதவியை கேட்டதில்லை...யாசிக்கவும் மாட்டேன்.

கேட்காமல் தரும் வள்ளலும் உண்டு.அந்த வள்ளல் எம்.ஜி.ஆர்., ஒருவர்தான்...ஆனால் இப்போது காலில் விழுந்து அழுது புரண்டால்தான் பதவி கிடைக்கிறது.

நான் உழைத்தேன்.ஜெ விற்காக பாடுபட்டேன்.உடைந்த கட்சிகளை ஒன்று சேர்த்தேன்.தில்லியில் பேசியதெல்லாம் நான்.இவரா அங்கு சென்று இரட்டை இலையை வாங்கினார்.

எல்லாரும் பணிந்திருக்கலாம்..ஆனால் இந்த நடராஜன் பணியமாட்டேன்.தமிழனுக்கு உரிய முதல் மரியாதை 'தன்மானம்'.

அதை நான் இழக்க மாட்டேன்....

(ஒரு பத்திரிகை பேட்டியில் நடராஜன் சசிகலா)

11 comments:

கோவி.கண்ணன் said...

//அதை நான் இழக்க மாட்டேன்....
//

மறந்தால் தானே நினைப்பதற்கு என்று சொல்வதைப் போல.....இருந்தால் தானே இழக்க.

முரளிகண்ணன் said...

ஆஹா. நான் கூட, நீங்க தான் வாங்கிக் கொடுத்தீங்களோண்ணு ஆர்வமா படிக்க வந்தேன்.

ஏப்ரல் 1 மேட்டராயிடுச்சு

குடுகுடுப்பை said...

:-0)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// கோவி.கண்ணன் said...
//அதை நான் இழக்க மாட்டேன்....
//

மறந்தால் தானே நினைப்பதற்கு என்று சொல்வதைப் போல.....இருந்தால் தானே இழக்க.///

சென்னையிலிருந்து சிங்கைக்கு ஆட்டோ வராது என்ற தைரியமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மிஸஸ்.தேவ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முரளிகண்ணன் said...
ஆஹா. நான் கூட, நீங்க தான் வாங்கிக் கொடுத்தீங்களோண்ணு ஆர்வமா படிக்க வந்தேன்.

ஏப்ரல் 1 மேட்டராயிடுச்சு//

முரளி..வேண்டுமானால் பதிவர் சந்திப்பில் உங்களுக்கு இரட்டை இலை கொண்டுவந்து தருகிறேன்..என்னால் முடுந்தது அதுதான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// குடுகுடுப்பை said...
:-0)//
வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:))))

கிகிகிகி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

*இயற்கை ராஜி* said...

சென்னையிலிருந்து சிங்கைக்கு ஆட்டோ வராது என்ற தைரியமா
///
Repeatuuu

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இய‌ற்கை