Saturday, February 28, 2009

சுஜாதாவின் டாப் 10 தேவைகள்..

தமிழ் வலைப்பதிவுகளில் கடந்த சில நாட்களாக பத்து என்னும் எண்..கிட்டத்தட்ட அனைத்து பிரபல பதிவர்கள் பதிவிலும் காணப்பட்டது.

முதன் முதலில்..ஒருவர்..பத்து கேள்விகள் என்று ஒரு பதிவு போட்டார்...பிறகு ஒவ்வொருவரும்..ஒவ்வொருவரிடம் கேட்கப்பட வேண்டிய 10 கேள்விகள்...என்று...கிட்டத்தட்ட..ஒரு புது தமிழ் படம் வந்தால் பதிவில் வரும் விமரிசனங்கள் போன்ற எண்ணிக்கையில் பதிவிட்டனர்.

அது சற்றே ஓய்ந்தபோது..தமிழ்மண விருதுகள்.பரிசு கிடைக்காத என்னைப் போன்றவர்கள்..டாப் 10ல் என் பதிவு..என்று பதிவிட ஆரம்பித்து விட்டோம்.நான் கிட்டத்தட்ட..டாப் 10ல் முதல் என்று ,உளியின் ஓசை'கலைஞர் டீ.வி.யில் சொன்னபோது..என்ன சந்தோஷம் சம்பந்தப்பட்டவர்கள் அடைந்தனரோ..அந்த அளவுக்கு என் பதிவும் டாப் 10ல் வந்ததற்கு மகிழ்ச்சிஅடைந்தேன்.

சரி...இந்த பதிவு இப்போது எதற்கு என்கிறீர்களா...

அமரர் சுஜாதா தன் டாப் 10 தேவைகள்/கவலைகள் என்று கற்றதும்...பெற்றதும்..தொடரில் சொல்கிறார் தெரியுமா?

1.உடல்நலம்....இதுவே முதல் இடம்

2.மனநலம்

3.மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது

4.தெரிந்தோ..தெரியாமலோ..யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது

5.இன்சொல்

6.அனுதாபம்

7.நல்ல காபி

8.நகைச்சுவை உணர்வு

9.நான்கு பக்கமாவது தினம் படிப்பது

10.எழுதுவது

இதை எழுதுகையில் அவர் வயது 70.

மேலும் அவர் சொல்கிறார்..பணம்..இந்த லிஸ்டில் இல்லை..அது இந்த வயதில் லிஸ்டை விட்டு போய்விட்டது.

இனி டாப் 10 தேவைகள் பதிவுகளை எதிர்ப்பார்க்கலாமா?

7 comments:

தமிழ் மதுரம் said...

உங்கள் மனதின் ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள்..

..உடல் இருந்தால் தானே பணத்தைத் தேட முடியும், ஆதலால் அவர் பணத்தை டாப் 10 இனுள் சேர்க்காது விட்டமை சரியே.

goma said...

சுஜாதா 70ல் எழுதிய டாப் 10 சரியான வரிசையில்தான் இருக்கிறது .

இதுவே 40. எழுதியிருந்தால் பணம் நிச்சயமாக 10க்குள் வந்திருக்கும்
அவர் சொல்லியிருக்கும் ஆர்டரில் முதல் மூன்றும்
1.உடல்நலம்....இதுவே முதல் இடம்

2.மனநலம்

3.மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது
வெற்றிகரமாகச் செயலாற்ற வேண்டுமென்றால் பணம் அவசியம்தானே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

70 வயது என்பதால்தான்..அவரே ..பணத்தை விட்டு விட்டேன்..என்பது போல உணர்த்துகிறார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கமல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

RAMASUBRAMANIA SHARMA said...

"அமரர், எழுத்தாளர் "திரு சுஜாதா" அவர்களைப்பற்றி என்ன விஷயம் சொன்னாலும் அது சுவாரசியமாகத்தான் இருக்கும்....அந்த அளவு அவர், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறார் என்பதில்...இரு வேறு கருத்துக்கள் இருக்க இயலாது...அருமையான பதிவு...நன்று...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி RAMASUBRAMANIA SHARMA