Wednesday, January 21, 2009

சுவர்களும்...சித்திரம் வரைபவர்களும்...

நாம் நகரத்தில் இருக்கிறோம்...சரளமாக ஆங்கிலம் பேசுகிறோம்.கணிணி இயக்கும் அறிவைப் பெற்றுள்ளோம்.இதனால் எல்லாம் நாம் புத்திசாலி ஆகிவிட முடியுமா?

இந்த விஷயங்கள்..கிராமவாசிகளுக்கு..இன்னும் எட்டவில்லை என்பதால் அவர்கள் முட்டாள்களா? உண்மைமைச் சொன்னால்...அவர்களுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியாது.

உதாரணத்திற்கு ...காலில் காயம் பட்டுக்கொள்ளாமல்...கலப்பையை ஒரு அடியாவது..நம்மால் ஓட்டமுடியுமா?(கலப்பை என்றால் என்ன என்கிறீர்களா)

அளவுகோல் இல்லாமல்...நாற்றுகளை வரிசையாக நடமுடியுமா?

கையை..வீசி உரத்தை..பரவலாக..அனைத்து பயிருக்கும்..வீசி தெளிக்க முடியுமா?

நாம்..விவசாயம் பற்றி..ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டவர்கள்.அவர்கள் நிலத்தில் படித்தார்கள்.ஆகவே அவர்கள் அனுபவம்..நேரடியானது...ஆழமானது.

நாம் பள்ளியில் படித்து..புத்திசாலி என சொல்லிக் கொள்கிறோம் (???!!!!)

ஆனால் அவர்கள் வாழ்க்கையில் கற்றதை வைத்து..புத்திசாலி ஆகி இருக்கிறார்கள்.

தங்கள் வாரிசுகளை மேல்நிலைக்கு கொண்டுவர...நமக்கு நகரத்து கல்வியையும்,வசதியையும் வழங்கிய அவர்கள்..புத்திசாலிகளா..நாம் புத்திசாலிகளா?

அவர்கள் வறுமையில் வாடினாலும் பரவாயில்லை என..மண்ணிலே நெல் முத்து எடுத்து...நம் பசி தீர்க்கும்...அவர்கள் மேலானவர்களா? நாம் மேலானவர்களா?

அவர்களை மதிப்போம்...அவர்கள் வறுமையை விரட்ட அரசு ஆவன செய்யுமா?.

சுவர் இருந்தாலே...சித்திரம் எழுத முடியும்.

(ஒரு செய்தி- சென்ற ஆண்டு மட்டும்...வறுமை காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 1,65,000 க்கு மேல் )

8 comments:

கோவி.கண்ணன் said...

//அவர்களை மதிப்போம்...அவர்கள் வறுமையை விரட்ட அரசு ஆவன செய்யுமா?.//

ஒத்த ரூபா அரிசியும், டிவி பெட்டியும் போதாது என்கிறீர்களா ?

ஏழைகள் நிறைய பேர் வருமையை வரவழைத்துக் கொள்கிறவர்களாகவே இருக்கிறார்கள் என்பதும் உண்மை, பாதிகாசு 'தண்ணி' க்கே போய்விட்டால் சேமிப்பு எங்கே ? வேலை இல்லாதா நாட்களிலும், வரட்சி நாட்களிலும் வருமைதான்.

ஒன்று கவனித்திங்களா ? மனம் போன போக்கில் வாழும் நரிக்குறவர்கள் எவரும் 'நாங்கள் கஷ்டப்படுகிறோம்' என்று எந்த வித போராட்டமும் நடத்தியதே இல்லை.

அதை சரி என்று சொல்லவரவில்லை. ஆண்டைகளையும், அரசாங்க பொறுப்பின்மையையும் தவிர்த்துப் பார்த்தால் ஏழ்மைக்கு காரணம் ஏழைகளிடம் திட்டமிடலோ, விழிப்புணர்வோ இல்லை.

அவங்க அப்படி இருப்பதால் தானே நமக்கு எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சி எம் ஆக கிடைத்தார்கள்.

:)

கோவி.கண்ணன் said...

வருமை // வறுமை என்று வாசிக்கவும் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

விவசாயிகளின் விளை பொருளுக்கு சரியான கொள்முதல் விலை அறிவிக்க வேண்டும்...உண்மையில் கடன் தள்ளுபடிகள்..ஏழை விவசாயிக்கு போய் சேர்கிறதா..என பார்க்க வேண்டும்.இந்த பதிவில் கூறிப்பிடப்பட்டது அவற்களைப்பற்றியே. மற்றபடி பொறுப்பற்று வாழும் 'குடி'மகன்கள் பற்றி அல்ல கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//திட்டமிடலோ, விழிப்புணர்வோ இல்லை.//

விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

குடுகுடுப்பை said...

நானும் ஒரு விவசாயி என்பதை சொல்லிக்கொள்கிறேன்.அதற்காகத்தான் இட ஒதுக்கீட்டிலும் சீர்த்திருத்தம் வேண்டும் நாட்டின் 80% உள்ள மக்களுக்கு திட்டங்கள் தேவை, இதெல்லாம் செய்ய நல்ல தலைவன் தேவை. கூஜாக்களும்,ராஜாக்களும் ஒன்னும் பண்ணமாட்டார்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
நானும் ஒரு விவசாயி//

மகிழ்ச்சி குடுகுடுப்பை

நசரேயன் said...

1000 சதவீதம் உண்மை ஐயா,நானும் ஒரு விவசாயி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
1000 சதவீதம் உண்மை ஐயா,நானும் ஒரு விவசாயி//


மகிழ்ச்சி நசரேயன்