Saturday, December 6, 2008

படம் ஓடவில்லையாயினும் பரவாயில்லை..ஓட்டுங்கள்..-நடிகர்

சமீபத்தில் தமிழ் நடிகர்.. ரித்தீஷ் நடித்த நாயகன் பட 100நாள் விழா நடந்தது.அந்த படம் முடிந்த போது, அதை வாங்கி விநியோகிக்க எந்த விநியோகஸ்தர்களும் முன்வராததால், நடிகரே தன் சொந்த பொறுப்பில் படத்தை வெளியிட்டார்.படம் எதிப்பார்த்ததைவிட சற்று நன்கு ஓடி நடிகருக்கு கணிசமான அளவு லாபத்தை ஈட்டிக்கொடுத்ததாம்.

இப்போது நடிகர் படம் எவ்வளவு நாட்கள் ஓடுமோ அவ்வளவு நிறைய நாட்கள் ஒட வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.அதனால் தியேட்டர் உரிமையாளர்களிடம், ஓட்டும் வரை ஓட்டுங்கள்,லாபம் வந்தால் எனக்கு கொடுங்கள்.நஷ்டமானால் சொல்லுங்கள்.நாம் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்கிறாராம்.

இந்த சமயத்தில் நடிகர் திலகம் நடித்த தில்லானா மோகனாம்பாள் படம் 100வது நாள் விழா அன்று..படம் வெள்ளி விழா நோக்கி என விளம்பரப் படுத்தப்பட்டது.ஆனால் 125 நாட்கள் ஓடியதுமே ..வசூல் குறைவானதால்..படம் எடுக்கப்பட்டது ஞாபகம் வருகிறது.

ம்..அதெல்லாம் அப்போது..இப்போது..

ஒரு நாளைக்கு ..ஒரு காட்சி என்றே படம் ஓட்டப்படுகிறது..நூறு நாட்களோ..ஆயிரம் நாட்களோ..

2 comments:

கார்க்கிபவா said...

தலைவரைப் பற்றி தவறாக பேசினாலும் இதுவரை லாபம் என்ற உண்மையை சொன்னதை பாராட்டுகிறோம்.

வீரத்தளபதி ரித்தீஷ் ரசிகர் மன்றத்தின் சார்பாக,

கார்க்கி

T.V.ராதாகிருஷ்ணன் said...

முதல் வருகைக்கு நன்றி
மீண்டும் வாருங்கள்