Friday, November 21, 2008

டாஸ்மாக் கடையும்...முனுசாமியும் (அரைப் பக்கக்கதை)

ஏதேச்சையாக அந்த பக்கம் போன..சோமுவின் பார்வை..டாஸ்மாக்..கடையைப் பார்த்தது...

அங்கு நின்றுக் கொண்டு..ஷைட் டிஷ்..சகிதம்...தண்ணீ அடித்துக்கொண்டிருக்கும்...17 வயதுதான் இருக்கும்..அந்த சிறுவனைப் பார்த்தார்..

அது...அவரிடம் டிரைவராக வேலைப் பார்க்கும்...முனுசாமியின் மகனல்லவா?

தன் மகனைப் படிக்க வைக்க வேண்டும்...அவன் நன்கு படித்து..ஏதேனும்..அலுவலகத்தில் நல்ல வேலைக்குப் போக வேண்டும்...தன்னைப்போன்ற வேலை..தன்னுடன் போக வேண்டும்..என்று எப்போதும் தன்னிடம் புலம்பிக்கொண்டிருக்கும்...முனுசாமியின்..மகன்தான் அது..

கோபம் தலைக்கேற..வீடு வந்து சேர்ந்தவர்...போர்டிகோவில்..காரை..துடைத்துக் கொண்டிருந்த ..முனுசாமியைக் கூப்பிட்டார்.

'முனுசாமி..உன் மகனை..இன்று..மந்தவெளி..டாஸ்மாக் கடையில் பார்த்தேன்..தண்ணி அடித்துக்கொண்டிருந்தான்..அவனை கண்டித்து வை' என்றார்..

விஷயம் கேள்விப்பட்ட..முனுசாமிக்கோ வருத்தம் மேலிட்டது..'நான் எவ்வளோ தரம் சொல்லிட்டேன்..எங்க வீடு இருக்கும்..அஷோக்நகர்ல இல்லாத கடையா...அநாவசியமா பணம் செலவு பண்ணி..இதுக்காக மந்தவெளி வரணுமா?நான் இன்னிக்கு கண்டிப்பா கண்டிக்கிறேன்'என்றான்..

வாயடைத்துப் போய் நின்றார் சோமு..