Monday, October 6, 2008

சத்தியம் தவறிய ராமதாஸ்

தமிழக மக்களிடையே இருக்கும் கட்சி வெறி ஒழிய வேண்டும்..
இரண்டாவதாக..இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் அவரவர் ஜாதியை மறந்து விட வேண்டும்
என கடவுள் தன் முன் தோன்றினால் தான் கேட்கும் வரமாயிருக்கும் என்ற ராமதாஸிடம்...
உங்களுக்கு வாழ்க்கை முடிய 24 மணி நேரமே உள்ளது என வைத்துக் கொள்ளுங்கள்,
அந்த கடைசி நிமிடங்களில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு
'என் மனைவியைக் கூப்பிட்டு..'நான் நம் இன மக்களுக்கு மூன்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்.
உப சத்தியமாக,என் வாரிசுகளும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என்று கூறியிருக்கிறேன்.இனி அந்த
சத்தியத்தை நீ தான் காப்பாற்ற வேண்டும் 'என்று கூறுவேன். என்று 1989ல் ஆனந்த விகடனுக்கு
பேட்டி கொடுத்துள்ளார்.அவர் உயிருடன் உள்ளபோதே அவர் சத்தியத்தை அவரால் காப்பாற்ற இயலவில்லை.

6 comments:

மோகன் காந்தி said...

1989ல் சொன்தை 2008ல் எப்படி காப்பாற்றுவார் அவர் 1990 லே மறந்திருப்பார்

நசரேயன் said...

சத்தியம் என்பது சர்க்கரை பொங்கல், நம்மாளுங்களுக்கு ஞபாக மறதி ரெம்ப அதிகம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மோகன் காந்தி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நசரேயன் said...
சத்தியம் என்பது சர்க்கரை பொங்கல், நம்மாளுங்களுக்கு ஞபாக மறதி ரெம்ப அதிகம்//

உண்மைதான் நசேரயன்

மணிகண்டன் said...

சார், ராமானுஜர் கூட தன்னோட குருநாதருக்கு கொடுத்த சத்தியத்த மீறி தான் சீரங்கம் கோபுரத்துலேந்து உபதேசம் செஞ்சார் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மணிகண்டன் said...
சார், ராமானுஜர் கூட தன்னோட குருநாதருக்கு கொடுத்த சத்தியத்த மீறி தான் சீரங்கம் கோபுரத்துலேந்து உபதேசம் செஞ்சார் !//


கொடுத்த சத்தியத்தை மீறுவதும்..தான் வாங்கிய சத்தியத்தை(!)தானே மீறுவதும் வேறு வேறு விஷயம் அல்லவா? மணி