Saturday, October 4, 2008

கிரீமி லேயரும்..இட ஒதுக்கீடும்..

எந்த பிரச்னைகளுக்கும்..முடிவு என்று ஒன்று உண்டு.,ஆனால் இந்த இடஒதுக்கீடு பிரச்னைக்கு..இந்தியாவில் முடிவே இல்லை எனலாம்.
பிற்படுத்தப்பட்டோருக்கு I.I.T.,I.I.M., இவற்றில் 27சதவிகிதம் இட ஒதுக்கீடு அமுல் செய்வதில் பிரச்னை வளர்கிறது.
அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதால் வருஷம் ஒன்றிற்கு 9 சதவிகிதம் என மூன்றாண்டுகளுக்கு இடங்கள் அதிகரிக்கும் என ஒரு தேவையில்லாத ஒன்றும் உள்ளே நுழைந்து விட்டது.

அடுத்து...பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் காலியாக இருப்பவை..பொதுவில் சேர்ந்துவிடும்..ஆகவே..பொருளாதாரத்தை வைத்துப் பார்க்காது அனைத்து பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்..என்கின்றனர்.இது எனக்கு சரியாகவே படுகிறது.இதில் எதற்கு ஒரு கிரீமி லேயர்..வருஷம் 4.5 லட்சத்திற்குள் வருமானம் வருபவர்கள் இதில் வரவேண்டுமாம்.அப்பா..சாமி..அவனுக்குள்ள 27%ல் அவனைச் சார்ந்த யார் வந்தால் உனக்கென்ன..அதில் நீ ஏன் மூக்கை நுழைக்கிறாய்.

அடுத்து ஒரு குற்றச்சாட்டு..கல்வியின் தரம் குறைந்து விடுமாம்...

ஆடு நனைகிறது என்கிறது ஓநாய்

இன்று மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களைப்பாருங்கள்..O.C.மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களைவிட இவர்கள் அதிகம் வாங்குகிறார்கள்.

அவர்களுக்கும்..இவர்களுக்கும்..கட் ஆஃப் மதிப்பெண்களில் பெரும் வித்தியாசம் இருப்பதில்லை.1 அல்லது 2 மதிப்பெண்கள்தான் வித்தியாசம்.

கடைசியாக..பொதுவாக..ஒன்று..

படிக்கும் மாணவன் எந்த இடத்தில் இருந்தாலும் படிப்பான்...ஆகவே கூப்பாடு போடுவதை நிறுத்துங்கள்

14 comments:

Thamizhan said...

காவல் காரண் காவல்காரணாக இருக்க வேண்டும்.எஜமாணன் ஆக இருக்க ஆசைப் படக் கூடாது.
உச்ச நீதி மன்றம் அரசியல் சட்டத்தின் காவலாளியாக இருந்தால் எந்தத் தொந்தரவும் இருக்காது.
மக்கள் மன்றத்திலே ஆழ்ந்த விவாதங்களுக்குப்பின் ஒதுக்கப்பட்டப் பொருளாதார அள்வுகோளை எப்படி உச்ச நீதிமன்றம் சட்டமாக்கலாம்?
சட்டம் இயற்றுவது மக்கள் மன்றம் என்பதை மீறியதனால் வந்த வீண் வம்புகள் இவை.
உச்ச நீதி மன்றம் தன் குறுக்கு யுக்திகளினால் மக்கள் மன்றத்தை மீறிச் செய்யும் வழி வகைகள் செய்வதை நிறுத்திக் கொண்டால் இட ஒதுக்கீட்டில் பிரச்சினையே இருக்காது.

நசரேயன் said...

/*படிக்கும் மாணவன் எந்த இடத்தில் இருந்தாலும் படிப்பான்...ஆகவே கூப்பாடு போடுவதை நிறுத்துங்கள்*/
அருமையா சொன்னீங்க

புருனோ Bruno said...

//சாமி..அவனுக்குள்ள 27%ல் அவனைச் சார்ந்த யார் வந்தால் உனக்கென்ன..அதில் நீ ஏன் மூக்கை நுழைக்கிறாய்.//

சாமி,

விமான ஓட்டி படிப்பிற்கு, கட்டணம் 6 லட்சம்

ஆக 27 சதவித இடங்களும் காலியாக இருக்கும். அது யாருக்கு போகும்.

அம்புட்டுதான் விஷயம்

மேலும் விபரங்களுக்கு இடப்பங்கீடு குறித்த என் இடுகைகளை பாருங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//புருனோ Bruno said...
சாமி,

விமான ஓட்டி படிப்பிற்கு, கட்டணம் 6 லட்சம்

ஆக 27 சதவித இடங்களும் காலியாக இருக்கும். அது யாருக்கு போகும்.

அம்புட்டுதான் விஷயம்//


புருனோ ஐயாவுக்கு..
நீங்க சொல்ற விமானி ஒட்டிக்கு 27% காலியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டும்.அவர்களுக்காகத்தானே 27%இடங்கள் அதிகரிக்கப்படுகின்றன.உங்களுக்கு நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.உண்மையாகப் பார்த்தால் O.C.யில் வருபவர்கள் எவரும்..இந்த இட ஒடுக்கீடு பற்றி கவலைப்படுவதில்லை.அவர்களுக்கு தங்களுக்கு எங்கே?எந்த கோர்சில் இடம் கிடைக்கும் என அனுமானிப்பதில் வல்லவர்கள்.நடுவே நல்லது செய்வதுபோல அரசியல்வாதிகள் தான் குட்டையை குழப்புகிறார்கள்.
வருகை புரிந்தமைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Thamizhan said...
காவல் காரண் காவல்காரணாக இருக்க வேண்டும்.எஜமாணன் ஆக இருக்க ஆசைப் படக் கூடாது.
உச்ச நீதி மன்றம் அரசியல் சட்டத்தின் காவலாளியாக இருந்தால் எந்தத் தொந்தரவும் இருக்காது.
மக்கள் மன்றத்திலே ஆழ்ந்த விவாதங்களுக்குப்பின் ஒதுக்கப்பட்டப் பொருளாதார அள்வுகோளை எப்படி உச்ச நீதிமன்றம் சட்டமாக்கலாம்?
சட்டம் இயற்றுவது மக்கள் மன்றம் என்பதை மீறியதனால் வந்த வீண் வம்புகள் இவை.
உச்ச நீதி மன்றம் தன் குறுக்கு யுக்திகளினால் மக்கள் மன்றத்தை மீறிச் செய்யும் வழி வகைகள் செய்வதை நிறுத்திக் கொண்டால் இட ஒதுக்கீட்டில் பிரச்சினையே இருக்காது.//


வருகைக்கு நன்றி தமிழன்...மீண்டும் வாருங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
/*படிக்கும் மாணவன் எந்த இடத்தில் இருந்தாலும் படிப்பான்...ஆகவே கூப்பாடு போடுவதை நிறுத்துங்கள்*/
அருமையா சொன்னீங்க//


வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி நசரேயன்

புருனோ Bruno said...

என் கருத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் (அல்லது நான் கூறிய நக்கல் புரியவில்லை) என்று நினைக்கிறேன். நான் அளித்த சுட்டியை படித்திருந்தால் புரிந்திருக்கும்

மீண்டும் ஒரு முறை படியுங்க:

//ஆக 27 சதவித இடங்களும் காலியாக இருக்கும். அது யாருக்கு போகும்.//

இன்னும் புரியலையா

அப்ப இத படியுங்க
http://microblog.ravidreams.net/reservation/

அவ்வளவு பெரிய இடுகையை படிக்க நேரமில்லைனா இத மட்டுமாவது படியுங்க

அப்புறமும் புரியலன்னா என் பதிவின் மறுமொழிகளில் கேளுங்கள் விளக்குகிறேன்

புருனோ Bruno said...

//நீங்க சொல்ற விமானி ஒட்டிக்கு 27% காலியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டும்//

அது எப்படி. காலியாயிருக்குன்னு ஒரு கண்ணீர் வடிச்சிபுட்டு அப்புறம் அந்த இடங்களை பின் வாசல் வழியாக நிரப்பனும்ல :) :)

அம்புட்டுதான் விஷயம்

மேலும் விபரங்களுக்கு இடப்பங்கீடு குறித்த என் இடுகைகளை பாருங்கள்

புருனோ Bruno said...

//இன்று மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களைப்பாருங்கள்..O.C.மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களைவிட இவர்கள் அதிகம் வாங்குகிறார்கள்.

அவர்களுக்கும்..இவர்களுக்கும்..கட் ஆஃப் மதிப்பெண்களில் பெரும் வித்தியாசம் இருப்பதில்லை.1 அல்லது 2 மதிப்பெண்கள்தான் வித்தியாசம்.//

சரியான மதிப்பெண் வேண்டுமா. 2008 மருத்துவக்கல்லூரி தேர்விற்கான மதிப்பெண் விபரம் இங்கு இருக்கிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அது எப்படி. காலியாயிருக்குன்னு ஒரு கண்ணீர் வடிச்சிபுட்டு அப்புறம் அந்த இடங்களை பின் வாசல் வழியாக நிரப்பனும்ல :) :)//

நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள அனைத்து பதிவும் படித்தேன்...
தூங்குபவர்களை எழுப்ப முடியும்..
தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பமுடியாதுதான்.
நன்றி மருத்துவரே!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//புருனோ Bruno said...
என் கருத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் (அல்லது நான் கூறிய நக்கல் புரியவில்லை) என்று நினைக்கிறேன். நான் அளித்த சுட்டியை படித்திருந்தால் புரிந்திருக்கும்

மீண்டும் ஒரு முறை படியுங்க:

//ஆக 27 சதவித இடங்களும் காலியாக இருக்கும். அது யாருக்கு போகும்.//

இன்னும் புரியலையா

அப்ப இத படியுங்க//

;-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
T.V.ராதாகிருஷ்ணன் said...

T.V.Radhakrishnan said...
//சரியான மதிப்பெண் வேண்டுமா. 2008 மருத்துவக்கல்லூரி தேர்விற்கான மதிப்பெண் விபரம் இங்கு இருக்கிறது//


paarththen..nanri

T.V.ராதாகிருஷ்ணன் said...

//புருனோ Bruno said...
//ஆக 27 சதவித இடங்களும் காலியாக இருக்கும். அது யாருக்கு போகும்.//

இன்னும் புரியலையா//


புரிந்து விட்டது