Monday, July 21, 2008

மாற்றம் மட்டுமே மாறாதது அல்ல (அறிவியல் போட்டிக்கான என் கதை)

அந்தரங்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஈகடார் நகர் விண்வெளி ஸ்பேஸ் ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் 5 வினாடிகளாக காத்திருந்தான் கே789456.
கவச உடைகளுடன்.காலை இந்திய நேரம் 7.01.அவனது வாட்ச்சில் இந்திய நேரம் அதுதான் என்றது.இந்திய - சென்னை ஷட்டில் வரவேண்டிய நேரம்.
அவன் இந்த ஷட்டிலை பிடித்தால் தான்.9.02க்கு சென்னையை அடைய முடியும்.
சற்று இரைச்சலுடன் விண்வெளிகலம் வந்து நிற்க..பறக்கும் மனிதக்கூட்டத்துடன் தானும் பறந்து..அடித்து ,பிடித்துக் கொண்டு கலத்தினுள் சென்றான்.அதில் இருந்த வருகை
மாணிட்டரில்..தனது மாதாந்திர பயணச்சீட்டை காண்பிக்க..அது சிறு விசில் ஒன்றை அடித்து..அவன் பயணத்தைக் குறித்துக்கொண்டது.அவன் பயணம் முடியும் முன் ..நாம் சற்று பின்
நோக்கிச் செல்வோம்.
அவனது முன்னோர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன்..இந்தியாவின் ஒரு பகுதியான சென்னையில் வாழ்ந்து வந்தவர்கள்.அங்கு சாஃப்ட்வேர் நிறுவனங்கள்..வளர..வளர..
மக்கள் வாழும் பகுதிகளெல்லாம் கட்டிடங்கள் கட்டப்பட்டன.வயல்வெளிகளில் பயிர் விளைந்ததுப் போக..கான்கிரீட் கட்டிடங்கள் விளைந்திருந்தன.ஜனத்தொகை ஆயிரம் கோடியை
எட்டிப்பிடித்தது.உலகில் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வேலைகளை இந்தியாவிற்கு அவுட்சோர்ஸிங்க் செய்தது.
உண்ண உணவின்றி..மக்கள் தவிக்க..விஞ்ஞானிகள் தங்கள் மூளைக்கு முழுநேர வேலைக்கொடுத்து..காலை உணவிற்கு..நீல நிறத்தில் ஒரு மாத்திரையும்,மாலை உணவிற்கு
ஒரு சிவப்பு மாத்திரையும்..இரவு டின்னருக்கு மஞ்சள்நிற மாத்திரையும் கண்டுபிடித்தனர்.ஆனால் ஒரு வேலை மாத்திரை பத்தாயிரம் இந்திய ரூபாய்.மக்கள் உணவுத் தேவை
பூர்த்தி ஆயிற்று.இருக்க இடம்..என்ன செய்வது என்றபோதுதான்...
..உலக நாடுகள் அனைத்தும் ஐ.நா.வில் கூடின.விண்வெளியில் பகுதிகளை..தங்கள் நாட்டு நிலப்பப்புக்கேற்ப..அவை பிரித்துக் கொண்டன.அங்கு தொங்கும் வீடுகள்
கட்டப்பட்டன.அனைத்து மக்கள் குடியிருப்பும்..விண்ணுக்கும்..தொழில்கள் அனைத்தும் மண்ணுக்கும் என்ற நிலை ஏற்பட்டது.
நீச்சே பாரத்..ஊஞ்சே பாரத் மகான் ஆயிற்று.
அப்படி குடியேறிய ஒரு குடும்பத்தில் பிறந்தவன் தான் நாம் முதல் பாராவில் பார்த்த கே789456.அவன் வசிக்கும் இடம் ஈகடார் எனப்பட்டது.அங்கு புவிஈர்ப்பு இல்லாததால்
பறக்கும் ஜாக்கெட்டுகளுடன் மக்கள் இருக்க வேண்டும்.அந்த செலவே மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் பகுதியை சாப்பிட்டன.அந்த ஜாக்கெட்டை அணிந்தால்தான்
அவர்களால் குறிப்பிட்ட இடங்களை அடையமுடியும்.இல்லையேல்..விண்வெளியில் சுற்றிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.
அவனது இருப்பிடத்திலிருந்து இரண்டு நிமிட பயணம் ஈகடார் நிலையத்திற்கு.அவனது முன்னோர்கள் இந்தியாவில் ரயில் பயணம் செய்திருப்பதாக அவனது தாத்தா ஒரு முறை
அவனிடம் கூறியிருந்தார்.
*** **** ****
9.01 க்கு கலம் வங்கக்கடலில் இறங்கியது.அங்கு தயாராய் நின்றிருந்த மோட்டார் படகுகளில் பயணிகள் ஏற்றப்பட்டனர்.அவர்களை கரையில் கலங்கரை விளக்கம் அருகே கொண்டுவந்து விட்டன அவை.அங்கு நின்றுக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்றில் அவன் ஏறினான்.அது அவனையும்..மற்ற சில பயணிகளையும் சுமந்துக்கொண்டு...சிறுசேரி என்ற இடத்தில் இருந்த ஒரு உயரமான கட்டிடத்தின் உச்சியில் நின்று அவனையும்,மற்றவர்களையும் இறக்கிவிட்டது.மேலிருந்து கீழ் வரும் லிஃப்டில் ஏறி 65ம் மாடியில் இறங்கினான்.அங்கிருந்த உடைமாற்றும் அறைக்குச்சென்று..அவன் பெயர் பொறித்திருந்த லாக்கரைத் திறந்து..தன் ஜாக்கெட்டுகளைக் கழட்டி அதில் வைத்துவிட்டு..சாதாரண பேண்ட்..சட்டைக்கு மாறினான்.
தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தபோது மணி 9.58
பத்து மணிக்கு வேலை ஆரம்பம்.அவன் பார்க்கும் வேலை வெளிக்கம்பெனி ஒன்றால் ஒப்படைக்கப்பட்டிருந்த ப்ராஜக்ட் ஒன்று.
அப்போது தான் தனக்கென கொடுத்திருந்த உதவி ஆள் வராத்தைப் பார்த்தான்.அந்த ஆள் வந்த போது மணி10.15.
தாமதத்திற்கான காரணத்தைக் கேட்டான்.
'நான் ஏறவேண்டிய கடக விண்வெளி ஸ்டேஷனில்..விண்வெளிக்கப்பலை நிறுத்தி அரசியல்வாதிகள் போராட்டம்' என்றான் அவன்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பார்கள்.ஆனால்..எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்தியஅரசியல்வாதிகளும் மாறமாட்டார்கள் என்று நினைத்தான்.
அதற்குள்...அவன் வேறு சிந்தனையில் இருப்பதை..அவன் தலைக்கு மேல் இருந்த சிவப்பு விளக்கு எறிந்து காட்டிக்கொடுத்தது.
இது முதல் எச்சரிக்கை..வேலையில் உஷாரானான் அவன்.
மாலை மணி 5.
ஷட்டவுன் போட்டுவிட்டு வேகமாக எழுந்தான்.
உடை மாற்றும் அறைக்கு வந்து..ஜாக்கெட்டுக்குள் மாறினான்.5.22க்கு ஹெலிகாப்டர் உச்சிக்கு வரும்..அதைப் பிடித்தால்தான் அவனால்5.38 விண்வெளிக்கப்பலை வங்கக்கடலில் பிடிக்கமுடியும்.எட்டு மணிக்கு வீடு போய் சேரமுடியும். டின்னர் மாத்திரையை முழுங்கிவிட்டுப் படுத்தால்தான் காலையில் சீக்கிரம் எழுந்து 7.01 கப்பலை பிடிக்க முடியும்.
சற்று சலிப்பு ஏற்படத்தான் செய்தது.

5 comments:

வெண்பூ said...

Cool story with correct title. Hats off...

Kanchana Radhakrishnan said...

நன்றி வெண்பூ

Mira Ram said...

Excellent story.Vetri pera vaazhththukkaL

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி மீரா ராம்

Anonymous said...

நேரம் கழித்து அலுவலகம் வருதல்,அரசியல்வாதிகல் போக்கு,சலிப்பு ஏற்பட வைக்கும் அன்றாட பழக்கங்கள்..
மாற்றம் மட்டூமே மாறாதது அல்ல...அருமையான கதை..அருமையான தலைப்பு..பாராட்டுகள்.