Tuesday, May 27, 2008

நாடகம் பொழுதுபோக்கா..கலையா?சொற்போர் - 4.

நடிப்புக் கலையைப் பற்றி சற்று பார்ப்போம்.வீட்டில் குழந்தைகள் நாய்,பூனை இவற்றுடன் பயமின்றி விளையாடுகின்றன.அந்த நாயும்,பூனையும் தன் கூரிய நகங்களைக் கொண்டு..குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி எப்படி விளையாடுகின்றன..அதுவும் அவற்றின் நடிப்புத்தானே?
பெண் குழந்தைகள் பொம்மைகளை வைத்துக் கொண்டு..சமையல் செய்வது போல விளையாடுகின்றனவே..
அதுவும் நடிப்புத்தானே?
உலகம் ஒரு நாடக மேடை..நாம் அனைவரும் நடிகர்கள் என்கிறார்களே..அப்படியெனில் நாம் ஒவ்வொருவரும் நடிகர்கள்தானே?நடிப்புக்கலை தெரிந்தவர்கள் தானே?
ஒரு பிச்சைக்காரன்..தனது..நல்ல காலை மடக்கி முடம்பொல காட்டுகின்றானே..அது அவன் நடிப்பு.நன்கு தெரியும்
கண்களை..தெரியாதது போல குருடாக்கிக் காட்டுகின்றானே..அதுவும் நடிப்புத்தானே?
மனிதன் மொழியை உருவாக்குவதற்கு முன்..பேசத்தொடங்குமுன்..நடிப்பின் மூலம் தானே தன் எண்ணங்களை
வெளிப்படுத்தி இருப்பான்.ஹிந்தி தெரியாத நாம் இன்றும் வடக்கே சென்றால்.. நெருக்கடி சமயங்களில்..நடிப்புத்
தானே நம்மை காப்பாற்றி உதவி செய்கிறது.புரிய வைக்க வேண்டியதை கை கால்கள் அசைவு மூலம் புரிய
வைப்பது கலைதானே.நடிகனுடைய கண்கள்தான் மற்ற உறுப்புக்களை விட மிகவும் முதன்மையானது.
கண்கள் இருளிலே ஒளியாக..நடிப்பிலே உயிராக விளங்குகின்றன என்று சொல்லலாம்.சபையிலிருக்கும் மக்கள்
நடிகனின் பாத்திரத்தின்தன்மையை புரிந்துக் கொள்கிறார்கள்.ஒவ்வொரு நடிகனும் நடிப்புக் கலையில் தேர்ச்சிபெற
பேசும் கண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
மேடையில் நடிக்கும் போது நடிகன் ஒருவன் அதற்குரிய பாவத்தைக் கண்களில் காட்டாது..வேறு எங்காவது
சுழல விட்டுக் கொண்டிருந்தால் சுவை கெட்டு விடும்.பாவத்தைக் காட்டும் கலையை பயில வேண்டும்.
அழும் போது அழகாக அழுவது ஒரு கலை.கோபம் கொண்டாலும் அழகாகக் கோபப் பட வேண்டும்.எந்த வகையிலும்
தன்னை விகாரப்படுத்திக் கொள்ளக்கூடாது.விகாரப்படுத்திக் கொள்ளாமல் கோபப்படுவது ஒரு கலை.குரல் பயிற்சி
..மிக முக்கியமானது.வார்த்தைகளிலே ஏற்றத்தாழ்வு இருக்க வேண்டும்.குழைவு இருக்க வேண்டும்.அன்பு காட்டி
பேசுவதும்..ஆத்திரத்தோடு பேசுவதும் குரலிலேயே தெரிய வேண்டும்.அடுத்த படியாக பேச்சிலே தெளிவு இருக்க
வேண்டும்.அதுவும் ஒரு கலை.ஒரு பாத்திரத்தின் வசனங்களை மனப்பாடம் செய்யும் போது வார்த்தைகளை
நன்கு கவனிக்க வேண்டும்.எந்தெந்த இடத்தில் தெளிவும்..அழுத்தமும் வேண்டும் என உணர வேண்டும்.ஒரு நடிகனின் பேச்சிலிருந்து மற்றொரு நடிகனுக்கு பேச்சு தொடங்கும்.அது போன்ற சமயங்களில் அழுத்தமாக
சொல்லாவிட்டால் மக்களுக்கு புரியாது.அழும் காட்சிகளில் உண்மையாக அழக்கூடாது.அழுதால் பேச்சு தெளிவாக
இருக்காது.அழுகை நடிப்பாக இருந்தால்தான் பேச்சு தெளிவாக இருக்கும்.அப்படி அழ தெரிந்திருக்க வேண்டியது
ஒரு கலை.
(தொடரும்)

No comments: