Saturday, May 24, 2008

நாடகம் பொழுதுபோக்கா..கலையா சொற்போர்-2

முதன் முதலில் பண்டைக்காலத்தில் நடகக்கலை எப்படி தோன்ற ஆரம்பித்தது?
நம் முன்னோர்கள்..மரத்தால் பொம்மைகளை செய்து அவற்றை ஆடி..ஓடி விளையாட வைத்தார்கள்.
பின்னர் மண்ணாலும்..துணியாலும் மனிதர்களைப்போல் அழகான பொம்மைகள் செய்து அந்த பொம்மைகளின் கை..கால்..தலை..முதலியவற்றை கயிற்றால் கட்டி..பின்னர் ,,அதற்கு பொம்மலாட்டம் என பெயர் வைத்தனர்,இது பொம்மலாட்டக்கலை.நாள் பட நாள்பட இப்படி உயிரில்லா பொம்மைகளை கொண்டு நடத்துவதை விட உயிருள்ள மனிதர்களுக்கு வேடம் போட்டுஇந்த விளையாட்டை அவர்களைக் கொண்டு நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்ற
எண்ணம் தோன்ற..இன்று நாம் காணும் நாடக விளையாட்டு தோன்றியது.அதனால் தான் கிராமங்களில்
நாடகத்தை விளையாட்டு என்கிறார்கள்.அத காரணமாகத்தான் நாடகத்தை ஆங்கிலத்தில் play என்கிறோம்.
மனிதன் தன் எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளியிடும் ஒலிக்குத்தான் மொழி என்று பெயர்.தமிழ் மொழியில் இதை விளக்க முத்தமிழை வகுத்தார்கள்.
அதாவது....இயல்..இசை..நாடகம்
நான் இப்போது பேசிக்கொண்டிருப்பது வார்த்தைகளால்..இது இயல்
இதையே ஒரு பாட்டாக நான் பாடினால் அது இசை
இயலும்..இசையும் மேடையில் சேரும்போது..அதுதான் நாடகம்.
இயல்..இசை..இரண்டும் சேர்ந்தால் நாடகம்.
ஆகவே தான் இயல்..இசை..நாடகம்..என நாம் நாடகத்தை கடைசியில் வைத்தோம்.
ஆம்..நாடகத்தை ஏன் கலை என்கிறோம்?ருசிக்கத்தக்கது..ரசிக்கத்தக்கது..உணரத்தக்கது..மகிழத்தக்கது
எல்லாவற்றையும் நாம் கலை எங்கிறோம்.
ஆய கலைகள் அறுபத்தினான்கினையும் என சரஸ்வதியை ஔவை விளிக்கிறார்.
மகிழத்தக்கதான கலை-மன்மதக்கலை
ருசிக்கத்தக்கது-சமையல் கலை
பார்த்து ரசிப்பது-ஓவியக்கலை
மகிழத்தக்கது-இசை மற்றும் ஓவியக்கலை
ரசிக்கத்தக்கது-நாடகக்கலை
நாடக்கலையில் பங்குபெறுபவர்கள் கலைஞர்கள்.நாடகக்கலை சிறப்புற இவர்கள் முழு ஒத்துழைப்பும் தேவை.
இவை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்
(தொடரும்)

No comments: